ETV Bharat / city

டைடல் பார்க் அலுவலகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டல கட்டடப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

author img

By

Published : Jul 21, 2021, 7:39 PM IST

டைடல் பார்க் அலுவலகத்தில் சிறப்பு பொருளாதார மண்டல கட்டிட பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
டைடல் பார்க் அலுவலகத்தில் சிறப்பு பொருளாதார மண்டல கட்டிட பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

விளாங்குறிச்சி பகுதியிலுள்ள டைடல் பார்க் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் சிறப்புப் பொருளாதார மண்டல கட்டடப் பணிகளை ஆய்வுசெய்த தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டது என்று அதிருப்தி தெரிவித்தார்.

கோவை: விளாங்குறிச்சி பகுதியிலுள்ள டைடல் பார்க் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் சிறப்புப் பொருளாதார மண்டல கட்டடப் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (ஜூலை 21) நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ்
தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

எல்காட் அமைக்கும் பணி

அதனைத் தொடர்ந்து டைடல் பார்க் அலுவலகக் கூட்டரங்கில் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது எல்காட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். வருங்கால சமூகத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும், பிற துறைகளை மேன்மைப்படுத்த இந்தத் துறை முக்கியப் பங்காற்றும்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தொழில் முதலீட்டை முன்னேற்றுவதற்கான நடவடிக்கை

இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், தமிழ்நாடு வருவாய் அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் இந்தத் துறை செயல்படுத்தப்பட்டுவருகிறது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை இத்துறை குறைவாக உள்ளதால் அங்குள்ள இளைஞர்கள் பிற மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.

அதனைத் தடுக்க தென் மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டது. எனவே நாம் சில இடங்கள் பின்தங்கியுள்ளோம். இந்நிலையில் இத்துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் நீரஜ் மித்தல், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மீண்டும் பள்ளிகள் திறப்பு? ஐ.சி.எம்.ஆர். முக்கியத் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.