ETV Bharat / city

கல்யாண ஆசையில் காதலியை மிரட்டிய காதலன்!

author img

By

Published : Mar 18, 2020, 7:43 PM IST

கோவை: திருமணம் செய்ய மறுத்த காதலியை மிரட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கல்யாண ஆசையில் காதலியை மிரட்டிய காதலன்
கல்யாண ஆசையில் காதலியை மிரட்டிய காதலன்

கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். அவரும் அவரது தங்கையின் கல்லூரியில் படித்துவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வெளியூர் அழைத்துச் சென்று பிரசாத் நெருக்கமாக இருந்துள்ளார்.

அதன்பின் பிரசாத் நடவடிக்கையில் மாற்றங்களை உணர்ந்த மாணவி, அவருடன் பேச்சுவார்த்தை வைத்திருப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். இதற்கிடையில் மாணவிக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த பிரசாத், அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கள்ள ஆட்டம் ஆடிய சிவசேனா பிரமுகர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.