ETV Bharat / city

மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் : பொள்ளாச்சி ஜெயராமன்

author img

By

Published : Apr 6, 2021, 4:03 PM IST

அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தாமோதரன்,கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் கோயம்புத்தூர்
மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் : பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணை சபாநாயகர் ஜெயராமன் அவரின் சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி அரசுப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

பின் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றியுள்ளார். மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர். எனவே, மீண்டும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என தெரிவித்தார்.

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான தாமோதரன் தனது சொந்த ஊரான நல்லி கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.

அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தாமோதரன்,கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தாமோதரன்

கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் வடுக பாளையம் அரசுப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தாமோதரன்,கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் கோயம்புத்தூர்
மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார்

அதிமுக வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி அவரது சொந்த ஊரில் வாக்கினை பதிவு செய்தார்.

அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தாமோதரன்,கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் கோயம்புத்தூர்
வால்பாறை அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி

இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.