ETV Bharat / city

பாசனத்திற்காக ஆழியாறு அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு

author img

By

Published : Oct 5, 2020, 6:27 PM IST

ஆழியாறு அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

cm dam open
cm dam open

கோயம்புத்தூர்: அணை திறப்பது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பாசனப் பகுதிகளுக்கு, ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி, பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட, ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம் சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 7.10.2020 முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2548 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை வட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கூடுதல் அறுவடை இயந்திரங்கள் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.