ETV Bharat / city

பட்ஜெட் 2020: குறுந்தொழில் புரிவோரின் எதிர்ப்பார்ப்பு!

author img

By

Published : Feb 1, 2020, 9:29 AM IST

budget_expectation_ small bussiness
குறுந்தொழில் வணிகர்களின் எதிர்பார்ப்புகள்

கோவை: நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலகும்நிலையில், சிறு குறு தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்பது குறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு சங்கம் உறுப்பினர் திரு மணிராஜ் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

பொதுபட்ஜெட்டில் சிறு குறு தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகளாக கோப்மா (கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு சங்கம்) உறுப்பினர் திரு மணிராஜ் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு குறுந்தொழில் நகரம் என்றும் ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு உள்ளனர்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையை வெளியிடும் பொழுது சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு சலுகைகள் ஏதேனும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ்நாட்டிலேயே கோவையில் மட்டும் தான் விவசாயிகளுக்கான பம்பு செட்டுகள் மோட்டார்கள் போன்ற உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகிறது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன் உதிரிபாகங்களுக்காண வரி விகிதம் 5 விழுக்காடாக இருந்தது.

தற்போது அது 18 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கு ஆறாயிரம் ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை நிதித்துறை அமைச்சரை தபால் மூலமாகவும், நேரடியாகவும் அணுகி ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தோம்.

கடந்த ஆண்டு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் வங்கிகளுக்கு மூலதன கடன் மற்றும் வங்கிகள் மேன்மையுற செய்வதற்காக ரூ.70,000 வரை நிதி வழங்கியது.

ஆனால் குறுந்தொழில் புரிவோருக்கு சொத்துப் பிணையம் இல்லாமலேயே கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டும் பல வங்கிகள் அதை தர மறுக்கிறது.

கோப்மா (கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு சங்கம்) உறுப்பினர் திரு மணிராஜ் பேட்டி

எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு வருமான வரி துறையின் வரிவிலக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை தான் கொடுத்துள்ளனர். அதை ரூ.5 லட்சமாக நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன?

Intro:மத்திய நிதிநிலை அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் குறுந்தொழில் வணிகர்களின் எதிர்பார்ப்புகள்


Body:மத்திய அரசானது நாளை நிதிநிலை அறிக்கையை வெளியிட உள்ளது இதனை நிர்மலா சீதாராமன் வெளியிடவுள்ளார் இதுகுறித்து சிறு குறு தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகளாக கோப்மா( கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு சங்கம்) உறுப்பினர் திரு மணிராஜ் கூறுகையில்

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு குறுந்தொழில் நகரம் என்றும் ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு உள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசானது ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையை வெளியிடும் பொழுது சிறு குறு தொழில் செய்யும் முனைவோர்களுக்கு சலுகைகள் ஏதேனும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டிலேயே கோவையில் மட்டும் தான் விவசாயிகளுக்கான பம்பு செட்டுகள் மோட்டார்கள் போன்றவை தயாரித்து வருவதாக தெரிவித்தார். மத்திய அரசானது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கு முன் உதிரிபாகங்கள் காண வரி விகிதம் 5 % இருந்ததாகவும் ஆனால் தற்பொழுது 18% உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். இதனால் ஒரு லட்சத்திற்கு 6000 ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை நிதித்துறை அமைச்சர் தபால் மூலமாகவும் நேரடியாக அணுகி ஜிஎஸ்டி வரியை குறைக்க கூறியும் அல்லது ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். இல்லை என்ற போதிலும் முன்னதாக இருந்த அந்த ஐந்து சதவிகித வரியையே நிர்ணயிக்கும் மாறும் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் வங்கிகளுக்கு மூலதன கடன் மற்றும் வங்கிகள் மேன்மையுற செய்வதற்காக 70,000 வரை நிதி வழங்கியதாகவும் ஆனால் குறுந்தொழில் முனைவோருக்கு சொத்துப் பிணையம் இல்லாமலேயே கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு பல வங்கிகள் அதை தர மறுக்கிறது என்று குற்றம்சாட்டினார். எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதுமட்டுமின்றி குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் கடந்த ஆண்டு வருமான வரி துறையின் வரிவிலக்கு 2.5 லட்சம் வரை தான் கொடுத்துள்ளனர் என்றும் அதை தற்பொழுது 5 லட்சம் வரை நீட்டிக்கும் மாறும் கேட்டுக்கொண்டார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.