ETV Bharat / city

படைவீரர் பிரதீப்பின் உடலை பெற்றுக்கொண்ட கேரள அமைச்சர்!

author img

By

Published : Dec 11, 2021, 4:36 PM IST

Updated : Dec 11, 2021, 8:39 PM IST

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் அலுவலர் பிரதீப்பின் உடல் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து திருச்சூர் கொண்டு செல்லப்பட்டது. பிரதீப்பின் உடலை தமிழ்நாடு - கேரள எல்லையான வாளையாறு பகுதியில் கேரள அமைச்சர் ராஜன் பெற்றுக்கொண்டார்.

படைவீரர் பிரதீப்பின் உடலைப் பெற்றுக்கொண்ட கேரள அமைச்சர், body of iaf soldier pradeep received by kerala minister rajan
body of iaf soldier pradeep received by kerala minister rajan

நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப் என்பவரும் உயிரிழந்தார்.

உயிரிழந்த 13 பேரின் உடல்களும், தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, 13 பேரின் உடல்களும், இறுதி சடங்கிற்காக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சூலூர் வந்த பிரதீப் உடல்

அதன்படி, பிரதீப்பின் உடல் தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து, கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடலுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனும் உடன் பயணித்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மணி ஆகியோர் உடலை திருச்சூர் அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த திருச்சூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரதாபன், கேரள அரசு சார்பில் உடலை பெற்றுக்கொண்டார்.

உடலை பெற்றுக்கொண்ட அமைச்சர்

பின்னர், அங்கிருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் பிரதீப் உடல் கொண்டுசெல்லப்பட்டது. தமிழ்நாடு - கேரள எல்லையான வாளையாறு பகுதியில், கேரள மாநில நில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் உடலை பெற்றுக்கொண்டு திருச்சூர் கொண்டு சென்றனர்.

சூலூர் விமானப்படை தளத்திலிருந்து உடல் கொண்டு செல்லப்பட்ட போது அப்பகுதி மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த பிரதீப்பிற்கு மனைவி, ஏழு வயது மகன், இரண்டரை வயது மகள் ஆகியோர் உள்ளனர். பிரதீப்பின் தந்தை கடந்த சில நாள்களாகவே உடல் நலக்கோளாறால் பிராணவாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: கேரளா கொண்டுசெல்லப்படும் விமான படை வீரர் பிரதீப்பின் உடல்

Last Updated : Dec 11, 2021, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.