ETV Bharat / city

ஹெலிகாப்டர் விபத்து: கேரளா கொண்டுசெல்லப்படும் விமான படை வீரர் பிரதீப்பின் உடல்

author img

By

Published : Dec 11, 2021, 11:07 AM IST

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த கேரளாவைச் சேர்ந்த விமான படை வீரர் பிரதீப்பின் உடல் சூலூரிலிருந்து சாலை வழியாக அவரது சொந்த ஊரான திருச்சூருக்கு இன்று (டிசம்பர் 11) கொண்டுசெல்லப்படுகிறது.

கேராளாவைச் சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் ப்ரதீப், IAF Soldier Pradeep body is flown from Sulur to Thirussur, The body of IAF Soldier Pradeep is being flown to Kerala
கேராளாவைச் சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் ப்ரதீப்

கோயம்புத்தூர்: குன்னூரில் டிசம்பர் 8ஆம் தேதி அன்று நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் கேரளாவைச் சேர்ந்த விமான படை வீரர் பிரதீப்பும் ஒருவர்.

இந்நிலையில், அவரது உடல் கோயம்புத்தூர் சூலூர் விமான படைத்தளத்திலிருந்து காலை 11 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரதீப்பின் உடல் சூலூர் விமான படைத்தளத்திற்கு காலை 10.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது.

கேராளாவைச் சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் ப்ரதீப், IAF Soldier Pradeep body is flown from Sulur to Thirussur, The body of IAF Soldier Pradeep is being flown to Kerala
கேரளாவைச் சேர்ந்த இந்திய விமான படை வீரர் பிரதீப்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு நேற்று (டிசம்பர் 10) டெல்லியில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடல் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. சூலூரிலிருந்து சாலை வழியாக உடலை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விடைபெற்றார் பிபின் ராவத்: ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.