ETV Bharat / city

ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் - சமூக செயற்பாட்டாளர் ’எவிடன்ஸ்’ கதிர்

author img

By

Published : Sep 28, 2022, 11:33 AM IST

Updated : Sep 28, 2022, 12:40 PM IST

ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ’எவிடன்ஸ்’ கதிர் தெரிவித்துள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/28-September-2022/16492400_evidencekathir12.mp4
ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் - சமூக செயற்பட்டாளர் ’எவிடன்ஸ்’ கதிர்

சென்னை: தமிழ்நாட்டில் அண்மை காலமாக ஆணவ படுகொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து ஆணவ கொலை தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டுமென சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் 17 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார்.

பின்னர் இது குறித்து பேசியவர், “ஆணவக்கொலை தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தனி சட்டத்தை இயற்ற வேண்டும், நாடு முழுவதும் ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றம் ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டத்தை இயற்றலாம் என தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்ட வரைவுகள் பெயரளவில் மட்டுமே இருக்கிறது, இன்னும் முழுமையாக சட்டமாக்கப்படவில்லை. அதே நேரத்தில், திராவிட மாடல் ஆட்சியை நடத்தக்கூடிய அரசு ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளுக்கு எதிரான தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் - சமூக செயற்பாட்டாளர் ’எவிடன்ஸ்’ கதிர்

இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிற பட்சத்தில் ஜாதி ஒழிப்புக்கு முக்கிய பங்காற்றும். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் 20 அறிவுரைகளை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கியுள்ளது. மாற்று மதத்தில் காதல் திருமணம் செய்யும் ஜோடிகளை மாநில தலைமைச் செயலாளர் கண்காணித்து, டிஎஸ்பி காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது வரை எந்த ஒரு மாநில அரசும் பின்பற்றவில்லை.

31 வகையான குற்றங்கள் ஆணவ படுகொலை காரணமாக இருப்பதாகவும், இவற்றை தனி சட்டம் இயற்றுவதன் மூலம் தடுக்க முடியும். ஓராண்டில் காதல் வயப்படுவதால் மட்டும் அது சார்ந்து 160 கொலைகள் நடைபெறுகிறது. இத்தகைய ஆணவ படுகொலைகளுக்கு ஜாதிய சங்கங்கள் பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுக்கிறது.

ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய பாஜக அரசு, ஆவண கொலைகளை தடுக்க சட்டம் தனிச்சட்டம் கொண்டு வராது, சமூக நீதிக்கான ஆட்சியை நடத்தக்கூடிய தமிழ்நாடு அரசே ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2020 வரை, 4 ஆணவ கொலைகள் மட்டுமே நடைபெற்றது.

உயர் ஜாதி பெண்ணை காதல் செய்த தலித் ஆண் படுகொலை செய்யப்பட்டால், அது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது, ஆண் பெண் இருவரும் உயர் ஜாதியாக இருந்து பெண் கொலை செய்யப்பட்டால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட மறுக்கப்படுவதால் தான் தனிச்சட்டம் தேவை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - தமீமுன் அன்சாரி

Last Updated : Sep 28, 2022, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.