ETV Bharat / city

சென்னையில் களைகட்டிய கிராமியத் திருவிழா!

author img

By

Published : Dec 29, 2019, 10:50 PM IST

Chennai handicrafts exhibition
Chennai handicrafts exhibition

சென்னை: கிராமத்து கலை பொருள்களை பெருநகரங்களில் வசிப்போரும் வாங்குவதற்காக கிராமியக் கண்காட்சியை நபார்டு வங்கி ஏற்பாடு செய்துள்ளது.

சமீப காலமாக மாறிவரும் வாழ்வியல் முறை, உணவுப் பழக்கங்கள் காரணமாக இளம் வயதினர் அதிக உடல்நல பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் இயற்கை உணவுகள் பற்றியும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுள்ள முதியவர்களிடமும், இணையதளத்திலும் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டு இயற்கை பொருள்களை வாங்க ஆர்வம்காட்டுகின்றனர்.

ஆனால் பல நேரங்களில் இதுபோன்ற விற்பனை செய்யப்படும் இயற்கை பொருள்கள் உண்மையிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதா, கலப்படம் இல்லாததா என்ற சந்தேகத்துடனே மக்கள் வாங்கவேண்டியுள்ளது. இயற்கை பொருள்கள் என சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் மற்ற பொருள்களைவிட பன்மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் அவற்றை வாங்கமுடியாத சூழல் நிலவிவருகிறது.

இதற்கு தீர்வாக அரசின் தர உத்தரவாதத்துடன் குறைந்த விலைக்கு பொருள்களை வாங்கும் வாய்ப்பு சென்னை மக்களுக்கு தற்போது உருவாகியுள்ளது. தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கி சார்பில், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட பொருள்கள், கிராமப்புற இயற்கை பொருள்கள் மற்றும் கைத்தறி பொருள்களின் கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் நடைபெற்றது.

இதில் காஷ்மீர், வடகிழக்கு, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செய்யப்பட்ட கைவினை கலை பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதில் நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, கைத்தறி பட்டுபுடவைகள், அழகுசாதன பொருள்கள், வேலைப்பாடுகள் நிறைந்த ஜமுக்காளங்கள், பட்டு ஓவியங்கள், மதுபானி ஓவியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை வேளாண் பொருள்கள், மரத்தினாலான சிற்பங்கள், ஆயுர்வேத மூலிகை பொருள்கள் உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராம்புறத் தயாரிப்புகள் 64 ஸ்டால்களில் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர தினை, கம்பு, சீரகசம்பா போன்றவற்றால் செய்யப்பட்டப் பாராம்பரிய உணவுகளும் விற்கப்பட்டது. சுடச்சுட பரிமாறப்பட்ட சீரகசம்பா கலவை சாதத்தை இளைஞர்கள் ஆர்வமுடம் வாங்கி ரசித்து உண்டு மகிழ்ந்தனர்.

இதுகுறித்து, பேசிய பாரம்பரிய உணவு ஸ்டால் வைத்திருக்கும் காந்திமதி ராமலிங்கம் கூறுகையில், "கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட முடவாட்டு கிழங்கை வைத்து சூப் தயாரித்து விற்பனை செய்கிறோம். இது உடலுக்கு நல்லது. தலைவலி, கால்வலி, தைராய்டு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும். இயற்கையான உணவு தானியங்களில் செய்யப்பட்ட உணவுகளை இங்கு விற்பனை செய்துவருகிறோம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது" என்றார்.

புலவர் என் ராஜாராமன் இந்தக் கண்காட்சி குறித்து கூறுகையில், "சீர்காழி வளநாடு விவசாயி தற்சார்பு மையத்தை உருவாக்கி அதன்மூலம் நஞ்சில்லாத உணவைத் தயாரித்துவருகிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை அவல், பொரி, மாவு, பனைஓலை கைவினை பொருள்கள் என மதிப்புகூட்டு பொருள்களாக விற்பனை செய்கிறோம். கிராமப்புற பெண்கள் வளர்ச்சி அடையும் வகையிலும், அதேநேரத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும் வகையிலும் விற்பனை செய்கிறோம்" என்றார்.

இந்த கண்காட்சியை சுற்றிப்பார்த்த பின் ரேச்சல் வால்டர் என்பவர் கூறுகையில், "ஒரு பொருள் வாங்க நாங்கள் பிகார், மேற்கு வங்கம் என்று செல்லமுடியாது. பல மாநிலங்களில் உள்ள கலை பொருள்களை வாங்க நினைப்பவர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் பெற முடியும். பொருள்கள் மிகக்குறைந்த விலையில் உள்ளது" என்றார்.

நபார்டு வங்கி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கிராமிய திருவிழாவில் ஸ்டால்களை வைப்பதற்கு தனியாக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதனால் கிராமப்புறங்களில் சாதாரணமாகப் பொருள்களைத் தயாரித்துவரும் சிறு, சிறு குழுக்களும் தங்களது பொருள்களை பெருநகரங்களில் சந்தைப்படுத்த நல்ல வாய்ப்பாக இதுஅமையும். இதன்மூலம், இனி வரும் நாள்களில் விருப்பமுள்ளவர்கள் விவசாயிகளிடமிருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை நேரிடியாக வாங்கும் வகையில், விற்பனையாளர், வாடிக்கையாளர்களுக்கு இந்த கண்காட்சி பாலமாக அமையும்.

இதையும் படிங்க: 'முதுகலைப் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு'

Intro:Body:
களைகட்டிய கிராமிய திருவிழா!

சென்னை:

சமீப காலமாக மாறி வரும் வாழ்வியல் முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் காரணமாக இளம் வயதினரே உடல் நல பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் இயற்கை உணவுகள் பற்றியும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய பொருட்கள் பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்று கூறலாம். அதிக அளவிலான மக்கள் இது குறித்து தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களிடமும், இணையதளத்திலும் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டு, இயற்கை பொருட்களை வாங்க ஆர்வம்காட்டுகின்றனர். ஆனால், பல நேரங்களில் இதுபோன்ற விற்பனை செய்யப்படும் இயற்கை பொருட்கள் உண்மையிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதா, கலப்படம் இல்லததா என்ற சந்தேகத்துடனே வாங்க வேண்டியுள்ளது. இல்லையென்றாலும் இதுபோன்ற பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் மற்ற பொருட்களைவிட பன்மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாதாரண மக்களால் அவற்றை வாங்க முடியாத சூழல் நிலவி வந்தது.

இதற்கு தீர்வாக அரசின் தர உத்தரவாதத்துடன் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கும் வாய்ப்பு சென்னை ஏற்பட்டுள்ளது. தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கி சார்பில், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட பொருட்கள், கிராமப்புற இயற்கை பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்களின் கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், காஷ்மீர், வடகிழக்கு, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கைவினை கலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, கைத்தறி பட்டுபுடவைகள், வேலைப்பாடுகள் கொண்ட ஷால்கள், வலையல்கள், அழகுசாதன பொருட்கள், வேலைப்பாடுகள் நிறைந்த ஜமுக்காளங்கள், பட்டு ஓவியங்கள், மதுபானி ஓவியங்கள், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட கைப்பைகள், சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை வேளாண் பொருட்கள், மன்பாண்ட பொருட்கள், மரத்தினாலான சிற்பங்கள், மர வீட்டு உபயோக பொருட்கள், ஆயுர்வேத பொருட்கள், மூலிகை பொருட்கள் உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராம்புற தயாரிப்புகள் 64 ஸ்டால்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர்த்து தினை, கம்பு, சீரக சம்பா போன்றவற்றால் செய்யப்பட்ட பாராம்பரிய உணவு வகைகளும் அங்கு விற்கப்படுகிறது. சுடச்சுட பரிமாறப்பட்ட சீரக சம்பா கலவை சாதத்தை இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வமுடம் வாங்கி ரசித்து உண்டு மகிழ்ந்தனர்.

இது பற்றி பேசிய பாரம்பரிய உணவு ஸ்டால் வைத்திருக்கும் காந்திமதி ராமலிங்கம், "கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட முடவாட்டு கிழங்கை வைத்து சூப் தயாரித்து விற்பனை செய்கிறோம். இது உடலுக்கு நல்லது. தலைவலி, கால்வலி, தைராய்டு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு. இயற்கையான உணவு தானியங்களில் செய்யப்பட்ட உணவுகளை இங்கு விற்பனை செய்து வருகிறோம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நபார்டு வங்கியின் உதவியுடன் இங்கு விற்பனை செய்து வருகிறோம்" என்றார்.

இந்த கண்காட்சி தொடர்பாக பேசிய புலவர் என் ராஜாராமன், "சீர்காழி வளநாடு விவசாயி தற்சார்பு மையத்தை உருவாக்கி அதன்மூலமாக நஞ்சில்லாத உணவை தயாரித்து வருகிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை அவல், பொரி, மாவு, பனை ஓலை கைவினை பொருட்கள் என மதிப்புகூட்டு பொருட்களாக விற்பனை செய்து வருகிறோம். கிராமபுற பெண்கள் வளர்ச்சி அடையும் வகையிலும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு குறைந்தவிலையில் பொருட்கள் கிடைக்கும் வகையில் விற்பனை செய்து வருகிறோம்" என்றார்.

ரேச்சல் வால்டர், "சாதாரணமாக பார்க்கலாம் என்றுதான் வந்தோம் ஆனால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு பொருள் வாங்க நாங்கள் பீகார், மேற்கு வங்கம் என்று செல்ல முடியாது, பல மாநிலங்களில் உள்ள கலை பொருட்களை வாங்க நினைப்பவர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் பெற முடியும். பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் உள்ளது" என்றார்.

நபார்டு வங்கி ஏற்பாடு செய்திருந்த இந்த கிராமிய திருவிழாவில் ஸ்டால்களை வைப்பதற்கு தனியாக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதனால், கிராமப்புறங்களில் சாதாரணமாக பொருட்களை தயாரித்து வரும் சிறு, சிறு குழுக்களும் அவர்களது பொருட்களை பெரு நகரங்களில் சந்தைப்படுத்த நல்ல வாய்ப்பாக இது அமையும் என்றும், இதன்மூலம், இனி வரும் நாட்களில் விருப்பமுள்ளவர்கள் விவசாயிகளிடமிருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை நேரியாக வாங்கும் வகையில், விற்பனையாளர், வாடிக்கையாளர்களுக்கு இந்த கண்காட்சி பாலமாக அமையும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.





Conclusion:visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.