ETV Bharat / city

முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்த வேண்டும்... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

author img

By

Published : Aug 31, 2022, 3:39 PM IST

Etv Bharat
Etv Bharat

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவேண்டும் என மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவேண்டும் என மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடிய அவர் செய்தியாளர்களிடத்தில் பேசியபோது, 'இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடி கொண்டிருக்கிற அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்களால் அனைத்துப் பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும். திமுக தலைவராக இல்லாமல் முதலமைச்சராக உள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்துகூற வேண்டும்: ஆகையால், வாழ்த்துச்சொல்ல வேண்டும் என்றும்; முதலைச்சர் மற்ற விழாக்களுக்கும் செல்லட்டும். அந்த விழாக்களில் கொடுக்கும் உணவை உண்ணட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனாலும், வீட்டில் கொழுக்கட்டை வைத்து வணங்கவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் வாழ்த்துகளையாவது சொல்லி இருக்க வேண்டும்", எனக் கூறினார்.

திமுக தலைவராக அல்ல; மாநில முதலமைச்சராக செயல்படுங்கள்: இந்துக்கள் பண்டிகைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறாரா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் எல்.முருகன், 'மற்ற சமுதாயப் பண்டிகைகளுக்கு சென்று அவர்களுடன் இனிப்பை சாப்பிடுகிறார். ஆனால், பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு திமுக தலைவராக இல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சராக தானாக முன்வந்து வாழ்த்து சொல்ல வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய முருகன், 'சட்டம் ஒழுங்கு இன்று தமிழ்நாட்டில் மிக மிக சீரழிந்து கொண்டு வருகிறது. நகை அணிந்து வெளியே செல்லும் சகோதரிகள், தாய்மார்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கஞ்சா என்பது அனைத்துப் பகுதிகளிலும் பரந்து விரிந்து காணப்படுவதால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அளவிற்கு தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் யாரும் பாதுகாப்பாக நடமாடவில்லை.

சட்டம் ஒழுங்கு கொண்டுவர தனிக் குழு: கடலூரில் ஜெயிலருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்கள் மீது எவ்வளவு தாக்குதல் நடக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடியாத சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வாங்கித் தரவேண்டும். தமிழ்நாட்டில் இதற்கென சட்டம் ஒழுங்கு சரிசெய்ய ஒரு சிறப்புக்குழுவை அமைக்க முன்வர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்த வேண்டும்... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

அரசியலுக்காக பேசுவதே திமுக: தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக, தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு எதிர்ப்பையும் மத்திய அரசிடம் பதிவு செய்யவில்லை. தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் கூறிய நிலையில், அவர் பேச வேண்டிய இடத்தில் எதையும் பேசவில்லை; அரசியலுக்காக வெளியில் வந்து பேசுவதுதான் திமுகவின் வாடிக்கை. அதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கருத்துச்சொல்வது சரி இல்லை' என்று கூறினார்.

இதையும் படிங்க: 'நாங்க ரெடியா இருக்கோம்...' ஆர்.பி உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.