Uganda para badminton: 'சாதனைப் படைத்த தமிழர்கள்' - ஸ்டாலின் வாழ்த்து

author img

By

Published : Nov 24, 2021, 12:27 PM IST

Updated : Nov 25, 2021, 12:39 PM IST

Uganda para badminton

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் (Uganda para badminton) போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை: உகாண்டா நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு பாரா பேட்மிண்டன் 2021 போட்டியில் (Uganda para badminton) இந்திய வீரர்கள் 45 பதக்கங்களைக் குவித்தனர். அதில் தமிழ்நாட்டு வீரர்கள் எட்டு பேர் பங்கேற்று 12 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.

இந்த நிலையில், தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு வீரர்கள் இன்று (நவம்பர் 24) சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய வீ. மெய்யநாதன், "பன்னாட்டு பாரா பேட்மிண்டன் போட்டி 2021 உகாண்டா நாட்டில் (Uganda para badminton international 2021) அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் எட்டு பேர் இடம்பெற்றனர். இப்போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்கள் வென்றனர். இதில் தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகள் மட்டும் 12 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

Uganda para badminton: 'சாதனைப் படைத்த தமிழர்கள்' - ஸ்டாலின் வாழ்த்து

போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். முதலமைச்சர் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதர அறிவுறுத்தினார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டி: வெற்றி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Last Updated :Nov 25, 2021, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.