ETV Bharat / city

தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண்கள் - டிஜிபி சைலேந்திரபாபு

author img

By

Published : Mar 9, 2022, 6:55 AM IST

Updated : Mar 9, 2022, 2:06 PM IST

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு காவல்துறையில் 21 விழுக்காடு பெண் காவலர்கள் உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்களின் மனைவியர் சங்கம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து பெண் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் நோக்கில், ஏற்பாடு செய்த நடமாடும் மருத்துவ முகாமை சென்னையில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மார்பக புற்றுநோய்

நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 'பெண் காவலர்கள் மார்பகத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து விடுகின்றனர். நாளடைவில் இது மார்பக புற்றுநோயாக மாறுகிறது. ஆரம்பக் காலத்திலேயே இது பற்றி தெரிந்து கொண்டால் உடனடியாக சரி செய்துவிடலாம். இதனால், அப்பல்லோ மற்றும் ஐபிஎஸ் அலுவலர்களின் மனைவியர் இணைந்து நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.

அடுத்ததாக பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, 'தமிழ்நாடு காவல்துறையில்

1 -டிஜிபி,

16 -ஐஜிக்கள்,

10 -டிஐஜிக்கள்,

27 -எஸ்பிக்கள்,

3 -ஏஎஸ்பிக்கள்,

19 -ஏடிஎஸ்பிக்கள்,

37 -டிஎஸ்பிக்கள்,

20 -ஆயிரம் பெண் காவலர்கள் என்று மொத்தம் 23,533 பெண்கள் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருவதாகவும், கிட்டத்தட்ட தமிழ்நாடு காவல்துறையில் 21 % பெண் காவலர்கள் பணியாற்றுவவருவதாக பெருமிதம் கொண்டார்.

காவல்துறையில் பெண்கள் சாதனை

கடந்த 1974 ஆம் ஆண்டிற்குப் பிறகு காவல்துறையில் பெண்கள் சேர்க்க தொடங்கியதாகவும், லத்திகா சரண் காவல்துறைக்குத் தலைமை இயக்குநராக இருந்ததாகக் கூறினார். ஆரம்பக் காலத்தில் பெண் காவல்துறையினரால் பணியாற்ற முடியுமா? ஆணையராக முடியுமா? டிஜிபி ஆக முடியுமா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

ஆனால், தற்போது எல்லா துறையிலும் ஆண்களுக்கு இணையாக பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். மார்ச் 8ஆம்தேதி மகளிர் தினமான இன்று பெண்களின் சேவையை பாராட்ட வேண்டும். முந்தைய காலங்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடையாது. பெண்கள் சாதித்து வருவதற்கு காவல்துறை ஒரு எடுத்துக்காட்டு ஆகும் என்றார்.

டிஜிபி சைலேந்திரபாபு

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னையில் கடந்த மழை வெள்ளத்தின் போது காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உயிருக்குப் போராடியவரைத் தனது தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரைக் காப்பாற்ற முயன்றது சர்வதேச அளவில் பாராட்டை பெற்றது.

மேலும் இதேபோல, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ரவுடிகள் பிரச்சினைக்குரிய பகுதிக்குளில் சர்வ சாதாரணமாக, தனி ஆளாக நுழைந்து அரிவாளோடு ரவுடியை கைது செய்ததால் வீர தீரப் பதக்கத்தைப் பெற்றள்ளது பாராட்டுக்குரியதாகும்.

அதேபோல, கோபிசெட்டிபாளையத்தில் மோதல் நடந்த போது, காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், 2 மகளிர் காவலர்கள் காவல் நிலையத்திற்குள் சென்று துப்பாக்கி எடுத்து வந்து சுட்ட சம்பவமும் நடந்துள்ளது என கூறினார்.

வருமுன் காப்போம்

நோய் வராமல் பெண் காவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். வருமுன் காப்போம் என்பது மிக முக்கியமானதாகவும், பெண்களுக்கு உடல் நலம் என்பது முக்கியம். பெண் காவல்துறையினர் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும். காவல் நிலையங்களில் பெண்கள் புகார் கொடுக்க வரும் போது மகிழ்ச்சியோடு பேசி அவர்களது குறைகளைக் கேளுங்கள். அரவணைத்து பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள். பாசிட்டிவ்வாக பேசுங்கள்" என்றார்.

மகளிர் காவல் நிலையங்களுக்குப் பிரச்சினையோடு வருபவர்களை அரவணையுங்கள். சாதித்த பெண் அலுவலர்கள் இங்கு இருக்கிறார்கள். பணி சிறப்பாக இருப்பதற்காக வாழ்த்துக்கள். பெண் காவல்துறையினர் நன்றாக இருந்தால் தான் காவல்துறை நலமாக இருக்கும் என்று அறிவுறுத்தினார்.

மருத்துவ உதவி

நல்ல மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள். மந்திரவாதி சொல்வதைக் கேட்காதீர்கள். போலி மருத்துவர்களை நம்பாதீர்கள். அறிவியல் பூர்வமான மருத்துவத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். தலைமைக் காவலர் ஒருவருக்கு இதய பிரச்சனை இருந்ததால் ரூ.3 லட்ச வழங்கி உடனே அறுவை சிகிச்சை செய்யக் கூறினேன்.

ஆனால், அவர் 5 மாதத்திற்குப் பிறகு இறந்துவிட்டதாக செய்தி வந்தது காரணம் கேட்ட போது ஜோசியர் 6 மாதத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் அதை நம்பி காவலர் செய்யாமல் இருந்ததால் இறந்தார் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Women's Day - 2022: இது ஒரு நாள் முதல்வன் அல்ல; ஒரு நாள் போலீஸ் - கல்லூரி மாணவியின் புதிய அவதாரம்!

Last Updated :Mar 9, 2022, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.