ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5 PM

author img

By

Published : Sep 22, 2021, 5:06 PM IST

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

1. தமிழ்நாடு அரசு அறிவிப்பால் அதிர்ச்சி 😲

பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி ரத்துசெய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2. 'முந்திரி ஆலை தொழிலாளர் மரணம்; நீதி பெற்றுத் தருவது எப்போது?'

கடலூர் திமுக எம்பியின் முந்திரி ஆலை தொழிலாளர் சந்தேக மரணத்தில் நீதி பெற்றுத்தருவது எப்போது எனக் கேள்வியெழுப்பியுள்ள பாமக நிறுவனர், நீதிமன்ற ஆணையின் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

3. திமுக எம்பியின் முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கடலூர் முந்திரி ஏற்றுமதி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் உடற்கூராய்வுப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மரண வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல்செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

4. 'Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

'Made in India போல உலகின் மூலை முடுக்கெல்லாம் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5. 5 சவரனுக்கு மேல் பெற்ற நகைக்கடன்களை வசூலிக்க உத்தரவு

ஐந்து சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற நகைக் கடன்களை வசூலிக்க அனைத்துக் கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

6. 3000 கிலோ ஹெராயின் விவகாரம்: விசாரணையைத் தொடங்கிய காவல் துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

7. முக்கியச் சந்திப்புகளை எதிர்நோக்கி அமெரிக்கா புறப்பட்ட மோடி!

ஐநா சபைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார்.

8. ஏறுமுகத்தில் தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 336 அதிகரித்து ரூ. 35,304 ஆக விற்பனையாகிறது.

9. IPL 2021: நடராஜனுக்கு கரோனா; நடக்குமா இன்றையப் போட்டி?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10. 3 நடிகர்களுக்குத் தங்கையான கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.