ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Sep 5, 2021, 4:56 PM IST

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

1. 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் ஆலோசனை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், அந்த 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று(செப். 5) ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. நிபா வைரஸால் கடும் ஊரடங்கா? அமைச்சர் பதில்

சென்னை: நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் தேவையில்லை என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

3. சென்னை வந்தடைந்த 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்

சென்னை: புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

4. ” 2024இல் பாஜக மட்டும்தான் இந்தியாவில் இருக்கும்”

2024 தேர்தலுக்கு பின் இந்தியாவில் ஒற்றை கட்சி ஆட்சிதான் இருக்கும் அதான் பிஜேபி ஆட்சி என வழக்கறிஞர் பிரிவு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

5. விநாயகர் சதுர்த்தி விழா - தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு அனுமதிக்காவிட்டால் பாஜக சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் வீடுகள் முன்பாக வைத்து வழிபடுவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6. வ.உ.சியின் நினைவுகள் போற்றப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

7. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

நாட்டின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர். சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் ஒன்றிய சுகாதார செயலாளருமான கேசவ் தேசி ராஜு உயிரிழந்தார். அவருக்கு வயது 66.

8. குவெட்டா குண்டுவெடிப்பு: 3 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயம்

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடந்த தற்கொலை படை நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

9. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் குறிப்பிட்டு ட்வீட்: 39 பிரபலங்கள் மீது வழக்கு!

2019ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியதாக திரைப் பிரபலங்கள் சல்மான் கான், ஹன்சிகா மோத்வானி, விளையாட்டு வீரர் ஷிகார் தவான் உள்ளிட்ட 39 பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10. விஜய்க்காக தனுஷ் மாற்றிக்கொண்ட விஷயம்!

விஜயின் ’பீஸ்ட்’ படத்தில் பாடல் பாடுவதற்காக நடிகர் தனுஷ் தன்னுடைய குரல் மாடுலேஷனை மாற்றி வருகிறாராம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.