ETV Bharat / city

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Mar 27, 2021, 6:44 AM IST

ETVBharatNewsToday
ETVBharatNewsToday

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல்கட்ட தேர்தல்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 77 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு நேற்று முதல் தொடங்கியது.

மேற்கு வங்கம், அசாமில் முதல்கட்ட தேர்தல்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல்கட்ட தேர்தல்

தமிழ்நாடு வரும் பிரியங்கா காந்தி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக தமிழ்நாடு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு வரும் பிரியங்கா காந்தி
தமிழ்நாடு வரும் பிரியங்கா காந்தி

பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர நாளான நாளை (மார்ச் 28) தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக அறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம் எனக் கோயில்கள் களைகட்டும். இந்த திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்றும் நாளையும் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குனி உத்திர  திருவிழா
பங்குனி உத்திர திருவிழா

கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம்

தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம்
கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம்

இந்திய புலம்பெயர்ந்தோர் குறித்த சிறப்பு கண்காட்சி

மடகாஸ்கர் நாட்டின் இந்திய தூதரக வளாகத்தில் இன்று நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்தோர் குறித்த சிறப்பு கண்காட்சியை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரகர் அபே குமார் முன்னிலை வகிக்கிறார்.

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி
மடகாசுகர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சேவுடன் இந்திய தூதரகர் அபே குமார்

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி

இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் இன்று தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 50 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.