ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 86 பேருக்கு கரோனா

author img

By

Published : Mar 14, 2022, 11:03 PM IST

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலின்படி, 'தமிழ்நாட்டில் புதிதாக 40 ஆயிரத்து 757 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 86 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, தமிழ்நாட்டில் 6 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரத்து 297 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரையில், தமிழ்நாட்டில் இருந்த 34 லட்சத்து 51 ஆயிரத்து 996 நபர்களுக்கு இந்த சோதனையில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குணமானவர்களின் எண்ணிக்கை

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 1,054 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 204 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 918 என உயர்ந்துள்ளது.

இன்றைய தினத்தில் அரசு மருத்துவமனையில் 1 நோயாளி உயிரிழந்துள்ளார். ஆகவே, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,024 என உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 33 நபர்களுக்கு தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நியாயத்துக்கு துணைநின்ற கம்யூனிஸ்ட் நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கு - நாமக்கல்லில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.