ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 838 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jan 4, 2021, 7:49 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 60 ஆயிரத்து 174 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளில், 838 பேருக்கு புதியதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

today-covid-19-update
today-covid-19-update

சென்னை: தமிழ்நாட்டில், மேலும் 838 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 550ஆக அதிகரித்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று(ஜன.4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், ”சென்னையில் மேலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு தனியார் ஆய்வகம் ஒன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 241ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில், மேலும் புதிதாக 60 ஆயிரத்து 174 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 835 நபர்களுக்கும், கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம், 836 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 925 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 550 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 7,970 நபர்கள் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 985 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவரின் எண்ணிக்கைக்கு 8 லட்சத்து ஆயிரத்து 416 என அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துமனையில் 3 நோயாளிகளும் , அரசு மருத்துமனையில் 7 நோயாளிகளும் என மேலும் 10 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12166 என அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு

வ.எண்மாவட்டம் பாதிப்பு
1சென்னை மாவட்டம் 2,26,456
2கோயம்புத்தூர் மாவட்டம் 52,649
3செங்கல்பட்டு மாவட்டம் 50,260
4திருவள்ளூர் மாவட்டம் 42,809
5சேலம் மாவட்டம் 31,742
6காஞ்சிபுரம் மாவட்டம் 28,818
7கடலூர் மாவட்டம் 24,720
8மதுரை மாவட்டம் 20,612
9வேலூர் மாவட்டம் 20,298
10திருவண்ணாமலை மாவட்டம் 19,192
11தேனி மாவட்டம் 16,933
12தஞ்சாவூர் மாவட்டம் 17,279
13திருப்பூர் மாவட்டம் 17,210
14விருதுநகர் மாவட்டம் 16,399
15கன்னியாகுமரி மாவட்டம் 16,431
16தூத்துக்குடி மாவட்டம் 16,110
17ராணிப்பேட்டை மாவட்டம் 15,944
18திருநெல்வேலி மாவட்டம் 15,337
19விழுப்புரம் மாவட்டம் 15,047
20திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14,263
21ஈரோடு மாவட்டம் 13,820
22புதுக்கோட்டை மாவட்டம் 11,430
23கள்ளக்குறிச்சி மாவட்டம் 10,815
24திருவாரூர் மாவட்டம் 10,972
25நாமக்கல் மாவட்டம் 11,272
26திண்டுக்கல் மாவட்டம் 11,002
27தென்காசி மாவட்டம் 8291
28நாகப்பட்டினம் மாவட்டம் 8211
29நீலகிரி மாவட்டம் 7993
30கிருஷ்ணகிரி மாவட்டம் 7904
31திருப்பத்தூர் மாவட்டம் 7478
32சிவகங்கை மாவட்டம் 6551
33ராமநாதபுரம் மாவட்டம் 6338
34தருமபுரி மாவட்டம் 6451
35கரூர் மாவட்டம் 5225
36அரியலூர் மாவட்டம் 4637
37பெரம்பலூர் மாவட்டம் 2257
38சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 930
39உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1026
40ரயில் மூலம் வந்தவர்கள் 428
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.