ETV Bharat / city

சென்னையில் 3 டன் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது!

author img

By

Published : Nov 4, 2020, 9:03 PM IST

சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 3 டன் குட்கா, ரூ.80 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், மூன்று பேரை கைதுசெய்தனர்.

gutka-seized-and-three-arrested
gutka-seized-and-three-arrested

ஆந்திராவிலிருந்து அதிகளவில் குட்கா, பான் மசாலா பொருள்கள் கடத்திவரப்பட்டு துரைப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது.

அதனால் தனிப்படை காவல் துறையினர் துரைப்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சாலையோரம் நின்றிருந்த 2 மினி வேனைகளைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில், 3 டன் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை சிக்கின.

அவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் வேனிலிருந்த மூன்று பேரைக் கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள், பெருங்குடி கல்லுக்குட்டைப் பகுதியைச் சேர்ந்த அருண் (23), பிரபாகரன் (29), மணிமங்களம் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது வாகனங்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.