ETV Bharat / city

"தெலங்கானா என்கவுன்டர் வரவேற்கத்தக்கது" - அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Dec 6, 2019, 11:34 PM IST

Minister Jayakumar byte
Minister Jayakumar byte

சென்னை: தெலங்கானாவில் நடைபெற்ற என்கவுன்டர் வரவேற்கத்தக்கது என்றும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை அணுகுவது குறித்து கூட்டணி கட்சிகளுடனும், மாவட்டச் செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீரவேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடாக இருப்பதாகவும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சூப்பர் ஃபாஸ்ட் முறையில் செயல்படுவதாகவும் கூட்டணிக் கட்சிகளுடன் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல ஸ்டாலின் பேசுவதாகவும் ; உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக்கூடாது என்பது தான் ஸ்டாலினின் உள்ளார்ந்த எண்ணம் என்றும்; திமுக தற்போது குழப்பமாக இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமார், எல்லா நேரங்களிலும் அறிவாலயத்தில் கூட்டம் நடத்தும் திமுக ராசியில்லை என்று நினைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வேறு இடத்தில் நடத்துகிறது என்றும்; திமுக தற்போது சென்டிமென்ட் கட்சியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதேபோல் அவர், "தெலங்கானாவில் நடைபெற்ற என்கவுன்டர் வரவேற்கத்தக்கது. தவறு செய்தவர்கள் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும் பெண்களுக்கான பாதுகாப்பு சரியாகவும் இருக்கிறது. அதனால் தான் இந்திய அளவிலான சிறந்த காவல் நிலையங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன." என்றார்.

இதையும் படிங்க:

என்கவுன்டரால் பாலியல் வன்முறைகள் தடுக்கப்படுமா? - ஜுவாலா கட்டா கேள்வி

Intro:Body:தெலங்கானாவில் நடைபெற்ற என்கவுண்டர் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

எப்பாடி பட்டாவது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. எப்பாடி பட்டாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. அதிமுக சூப்பர் ஃபாஸ்ட் முறையில் செயல்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலை எப்படி அணுகுவது குறித்து கூட்டணி கட்சிகளுடனும், மாவட்ட செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கீழே விழிந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல ஸ்டாலின் பேசுகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடாது என்பது தான் ஸ்டாலினின் உள்ளார்ந்த எண்ணம்.

கூட்டணி கட்சிகளுடன் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடைபெறும்

திமுக தான் தற்போது குழப்பமாக இருக்கிறது. ராசியில்லை என்று நினைத்ததால் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வேறு இடத்தில் நடத்தப்படுகிறதா?

திமுக தற்போது செண்டிமெண்ட் கட்சியாக மாறிவிட்டது.

தெலங்கானாவில் நடைபெற்ற என்கவுண்டர் வரவேற்கத்தக்கது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சரியான முடிவு கிடைத்திருக்கிறது. தவறுதவறு செய்தவர்கள் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.
Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.