கலைஞரை காணோம்.. அரசு ஆசிரியர்களின் ஆதங்கம்...

author img

By

Published : Jun 3, 2022, 12:37 PM IST

கலைஞரின் ஆட்சி
கலைஞரின் ஆட்சி ()

திமுக ஆட்சிக்கு வந்தால் தங்களது 10 ஆண்டு கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எண்ணத்தில் வாக்களித்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் "கலைஞரின் ஆட்சி எங்கே போனது" என்று கேள்வி எழுப்பும் விதமாக எழுதிய கடிதம் ஒன்று அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலைஞரின் ஆட்சி எங்கே போனது என்று கேள்வி எழுப்புவதாக கூறப்படும் கடிதம் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைஞருக்கு ஒரு கடிதம்

அரசு ஊழியர்களின் ஆதவன்
ஆசிரியர்களின் காவலன் என்றிருந்த
கலைஞர் ஆட்சி எங்கே போனது என்னும் கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் முத்தமிழறிஞரே!

வல்லவராய் முதல்வர்
நல்லவராய் அமைச்சர்
இருந்தும்
அநாதைகளைப் போல ஆசிரியர்கள்
அலைக்கழிக்கப்படுகின்றனர்.
காரணம்
தெரியாமல் தேடுகிறோம் கலைஞர் ஆட்சியை..

யார் சொல்லி
நடக்கிறது
யாருக்காக நடக்கிறது
புரியவில்லை
ஆட்சியும், காட்சியும்..

நிதி அமைச்சர்
நக்கலடிக்கிறார்
முதல்வரோ அமைதியாய் இருக்கிறார்..

இருந்தும்
சங்கங்கள் அமைதி காக்கின்றன..
காரணம்
கலைஞருக்குக் காட்டும் நன்றி..

DA இன்னும் அறிவிக்கப்படவில்லை..
Surrender இன்னும் அனுமதிக்கப்படவில்லை..
CPS பற்றி பேச்சே இல்லை..

விடுமுறை அறிவித்ததே
மிகத் தாமதம்..
அப்படியிருந்தும்
அறிவித்த
விடுமுறை
அபகரிக்கப்படுகிறது.

எங்கு திரும்பினும்
ஒரே பேச்சு..
எங்கே போனது
கலைஞர் ஆட்சி..

நடப்பதென்ன
கலைஞர் ஆட்சியா?
கண்ணைத் தேய்த்துப்
பார்க்கிறோம்.
கைகளை
கிள்ளிப் பார்கின்றோம்..
ஆம்
கலைஞர் பெயரில்தான்
நடக்கிறது
ஆனால்
கலைஞரைத்தான்
காணோம்..

சங்கமாய்
இருந்தால்
சூரியனுக்கே
விடியல்..

ஆசிரியர்களுக்குள்
ஆளுக்கொரு பிரச்சினையை
நுழைத்து,
சங்கத்தைக் கலைத்து,
வங்கப் பிரிவினைபோல,
சங்கப்பிரிவினை செய்யும்
முயற்சியில்
சாதிக்கின்றனர்
அதிகாரிகள்..

அவர்கள்
கலைஞரின்
ஓட்டுக்கு மட்டுமல்ல,
நாட்டுக்கும் வேட்டு வைக்கின்றனர்..

முத்தமிழ்கொண்ட
தலைவா!
நீ!
மண்ணைவிட்டு
மறைந்ததாய்
மக்கள்
நம்பலாம்..
ஆனால்
நாங்கள்
நீ
ஓயாத உழைப்புகண்டு
நித்திரையில்தான்
இருக்கிறாய் என்றே
நினைவில் கொள்கிறோம்..

உரிமைகளைக் கொடு...
உணர்வுகளைக் காப்பாற்று..

கொள்ளை போகிறது
நீர் தந்த உரிமைகள்

கொடுத்து கொடுத்தே
சிவந்த கரம்
உன் கரம்..

மீண்டும் கொடு..
எங்களை மீட்டுக்கொடு..

கேட்பது
நிதி அல்ல நீதி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.