ETV Bharat / city

தமிழ்நாடு: இன்றைய வானிலை நிலவரம்

author img

By

Published : Mar 24, 2022, 3:44 PM IST

தமிழ்நாடு: இன்றைய வானிலை நிலவரம்
தமிழ்நாடு: இன்றைய வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று(மார்ச் 24) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று(மார்ச் 24) மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தபோது, 'தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியின்மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில்,

  • கொடைக்கானலில் 8 சென்டி மீட்டர் மழையும்,
  • ராஜபாளையத்தில் 6 சென்டி மீட்டர் மழையும்,
  • குன்னூர் மற்றும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நாட்டில் 1,938 பேருக்கு கரோனா பாதிப்பு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.