ETV Bharat / city

கழிவுகள் மேலாண்மை விதிகள் அமல்: மருத்துவக் கழிவுகளை பிரிக்க, சேமிக்க கட்டுப்பாடுகள்!

author img

By

Published : Jun 9, 2021, 10:01 PM IST

மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ஐ தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கழிவுகள் மேலாண்மை விதிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம், மருத்துவ கழிவுகள், முக்கிய அறிவிப்பு, சென்னை செய்திகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
Tamilnadu pollution control board statement

சென்னை: மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ஐ தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ஐ பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகளின் உற்பத்தியையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட இயலும். இவ்விதிகளை அமல்படுத்தவும், செயல்படுத்துவதற்கும் அதிகாரம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் உள்ளது.

இவ்விதிகளின்படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. இருப்பினும், செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக மருத்துவக் கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.

தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று சூழவில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து அந்தந்தப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை செய்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.