ETV Bharat / city

திருமுருகன் காந்தி தனி மனிதர் அல்ல; அவர் பின்னால் நாங்கள் இருக்கிறோம்!

author img

By

Published : Dec 16, 2019, 3:45 PM IST

nallakannu
nallakannu

சென்னை: மக்களுக்காக போராடும் அமைப்புகள் மீது பொய் வழக்குகள் புனைந்து மிரட்டுவதை மத்திய மாநில அரசுகள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள்,
”முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் கூட இல்லாத அளவுக்கு எடப்பாடி ஆட்சியில் மக்கள் விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. மக்களின் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. திருமுருகன் காந்தி மக்களுக்காக போராடக்கூடியவர். அவர் மீது அற்பக் காரணங்களுக்காக 40 பொய் வழக்குகளை மத்திய, மாநில அரசுகள் புனைந்துள்ளன.

ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் அஞ்சலி செலுத்தினால் வழக்கு, பேசினால் வழக்கு, கூட்டங்களில் கலந்துகொண்டால் வழக்கு என இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள இறையாண்மையைக் கூட குற்றமாக்கி வழக்குத் தொடுத்து வருகிறார்கள். அந்த வழக்குகளை தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதுபோன்ற பொய் வழக்குகளைப் புனைந்து மக்களுக்காக போராட்டம் நடத்தும் அமைப்புகளை மிரட்டும் போக்கை அரசு கைவிட வேண்டும். திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள அனைத்தும் பொய் வழக்குகள் என்பதை சட்டப்படி நிரூபிப்போம். இங்குள்ள யாரும் தீவிரவாதக் கூட்டம் அல்ல, முறையாகப் பதிவு பெற்ற அரசியல் இயக்கங்கள் என்பதை இந்த அரசுகள் உணரவேண்டும்.

திருமுருகன் காந்திக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் - அரசியல் கட்சித் தலைவர்கள்

மேலும், திருமுருகன் காந்தி தனி மனிதர் அல்ல அவர் பின்னால் நாங்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்துகிறோம் “ என்றனர். மேலும் இக்கூட்டத்தில் மதிமுக, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்தியாவிற்கு முற்போக்கு திசையை காட்டும் தமிழ்நாடு- திருமுருகன் காந்தி

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.12.19

திருமுருகன் காந்தி தனி மனிதர் அல்ல அவர் பின்னால் நாங்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதை அரசுகளுக்கு உணர்த்துகிறோம்...

சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அமைபினர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நல்லகண்ணு மற்றும் வேல்முருகன் ஆகியோர், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஆட்சிக் காலங்களில் கூட இல்லாத அளவுக்கு எடப்பாடி ஆட்சியில் மக்கள் விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறது. இந்தப் போக்கு என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானதாகும், திருமுருகன் காந்தி மக்களுக்காக போராடக்கூடியவர் அவர் மீது அற்ப காரணங்களுக்காக 40 பொய் வழக்குகளை மத்திய மாநில அரசுகள் புணைந்துள்ளது. மெரினாவில் அஞ்சலி செலுத்த வந்தால் வழக்கு, பேசினால் வழக்கு, கூட்டங்களில் கலந்துகொண்டால் வழக்கு, என இந்திய அரசியல் அமைப்பின் பால் வழங்கப்பட்டுள்ள இறையாண்மையை கூட குற்றமாக்கி வழக்கு தொடுத்து வருகிறார்கள். அந்த வழக்குகளை தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இது போன்ற பொய் வழக்குகளை புணைந்து மக்களுக்காக போராட்டம் நடத்தும் அமைப்புகளை மிரட்டும் போக்கை அரசு கைவிட வேண்டும். திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ளது அனைத்தும் பொய் வழக்குகள் என்பதை நிரூபிப்பது. உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்துள்ளோம். இங்கு உள்ளவர்கள் யாரும் தீவிரவாதக் கூட்டம் அல்ல, முறையாகப் பதிவு பெற்ற அரசியல் கட்சியினர் என்பதை இந்த அரசாங்கம் உணரவேண்டும், மேலும் இதுபோன்ற அநீதி செயல்களை செய்வதை கைவிட வேண்டும். திருமுருகன் காந்தி தனி மனிதர் அல்ல அவர் பின்னால் நாங்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதை அரசுகளுக்கு உணர்த்துகிறோம் என்றனர்...

tn_che_02_periyarists_press_meet_for_Thirumurugan_ganthi_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.