ETV Bharat / city

கேரளாவுக்கு உதவ தயார் - முதலமைச்சர் ட்வீட்

author img

By

Published : Aug 9, 2020, 3:41 PM IST

கேரளா மாநிலம் இடுக்கி நிலச்சரிவு தொடர்பாக மீட்பு, நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என்று கேரளா முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் கே. பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

tamilnadu cm K Palaniswami conversation Kerala CM pinarayi vijayan
tamilnadu cm K Palaniswami conversation Kerala CM pinarayi vijayan

சென்னை: கேரளா மாநிலம் இடுக்கி நிலச்சரிவு சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதலமைச்சர் கே. பழனிசாமி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.

கேரளாவின் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. இதில் 17 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்த நிலையில், அனைவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 28ஆக உயர்வு; அதில் 17 பேர் தமிழர்கள்!

இதுதொடர்பாக முதலமைச்சர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன்; மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை செய்ய தயார் என உறுதியளித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

  • I spoke to Hon @CMOKerala today morning about the tragic loss of lives and damages caused due to heavy rain and land slides at Munnar. I promised to provide necessary support in rescue and relief operations.

    — Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.