ETV Bharat / city

நெல்லுக்கு புதிய குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தது தமிழ்நாடு அரசு

author img

By

Published : Aug 30, 2022, 10:21 PM IST

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 160 என்றும் விலை நிர்ணயம் செய்து நெல் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

நெல் விவசாயிகளுக்கு புதிய குறைந்தபட்ச ஆதார விலை

சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து தமிழ்நாடு அரசு இன்று (ஆக. 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ், காரீப் பருவம் 2002–2003 முதல் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு, ஒன்றிய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,040 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,060 என்றும் நிர்ணயித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும், தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 75 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,115 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கடந்த 2021-2022 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-2023 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை அண்ணாசாலை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதிய சிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.