ETV Bharat / city

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்... 314 பேருக்கு விருதுகள்...

author img

By

Published : Sep 5, 2022, 7:23 AM IST

தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்பட விருதுகள் 160 பேருக்கும், சின்னத்திரை விருதுகள் 81 பேருக்கும் வழங்கப்பட்டது.

Etv Bharatதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
Etv Bharatதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன விருதுகள் வழங்கும் விழா நேற்று (செப்-4) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

வெள்ளித் திரைக்கு 5 பவுன்: திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வில் 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரமும், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரமும் என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ. 26,25,000 (இருபத்தாறு லட்சத்து இருபதைந்தாயிரம்) காசோலை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்... 314 பேருக்கு விருதுகள்...

சின்னத்திரைக்கு 3 பவுன் தங்கம்: அதேபோல சின்னத்திரை விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் என்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குதலா ரூ. 1 லட்சம் என்றும் 20 பேருக்கு காசோலை வழங்கப்பட்டது. சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் (2008-09 கல்வியாண்டு முதல் 2013-14 கல்வியாண்டு வரை) மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 1,50,000 காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:’உங்கள் படைப்புகளிலேயே இதுதான் சிறந்தது..!’ - ‘நட்சத்திரம் நகர்கிறது’ குறித்து ரஜினிகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.