மழைக்கு ஒதுங்கியது குத்தமா? கத்திகுத்து வாங்கிய ஸ்விகி ஊழியர்

author img

By

Published : Jul 23, 2019, 4:17 PM IST

சென்னை: காசிமேட்டில் ஸ்விகி ஊழியரைக் கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்னை காசிமேடு பகுதியிலுள்ள கொடிமரத்து சாலையில் உள்ள தனியார் நகைக் கடை அருகே ஸ்விகி நிறுவனத்தின் டெலிவரி பாயாக பணிபுரியும் துளசிராம் மழைக்காக ஒதுங்கினார்.

அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டுபேர் துளசிராமனை கத்தியால் தலையில் குத்திவிட்டு கையில் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்ற அவர்கள் அங்கிருந்து ஒரு இரு சக்கர வாகனத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து காசிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரைப் பார்த்ததும் இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க முயன்றபோது கத்தியைக் காட்டி காவல் துறையினரையும் மிரட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட லோகேஷ், அவர் வைத்திருந்த ஆயூதம்
கைது செய்யப்பட்ட லோகேஷ், அவர் வைத்திருந்த ஆயூதம்

அப்போது ஒருவர் தப்பியோட மற்றொருவரைக் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்கின்ற பல்லு லோகேஷ் என்பது தெரியவந்தது. மது போதையில் ரவுடி கண்ணன் என்பவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் அதற்காகத்தான் கத்தியுடன் சுற்றித் திரிந்தாகவும் காவல் துறையினரிடம் அவர்கள் கூறினர். கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
Intro:nullBody:சென்னை காசிமேட்டில் இருசக்கர வாகனத்தை திருடி ஸ்விகி ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


சென்னை காசிமேடு எஸ்.என் செட்டிதெரு கொடிமரத்து சாலை அருகே உள்ள H. M. T. நகை கடை உள்ளது.நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராம் தெருவைச் சேர்ந்த ஸ்விகி நிறுவனத்தின் டெலிவரி பாயாக பணிபுரியக்கூடிய துளசிராம் மழைக்காக கடையின் வாசலில் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார்.அப்பொழுது இரு மர்ம நபர்கள் துளசிராமனை கத்தியால் தலையில் வெட்டி விட்டு கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர் இதனையடுத்து காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே பல்சர் இரு சக்கர வாகனத்தை திருடி கொண்டு சென்றுள்ளனர்.இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் நேற்று வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியில் பல்சர் வண்டியை இருவர் தள்ளி வந்து கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வண்ணாரப்பேட்டை உதவி ஆய்வாளர் பிரவீன் மற்றும் காவலர் சார்லஸ் இருசக்கர வாகனத்தை தள்ளி வந்த இருவரையும் போலீசார் சந்தேகத்தில் அழைத்துள்ளனர் போலீசாரை பார்த்து இருவர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.இதனையடுத்து தப்பி ஓடிய இருவரையும் போலீசார் விரட்டி பிடிக்க முயன்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டினர்.பின்னர் மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கத்தியை போலீசார் பறிமுதல் செய்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த லோகேஷ் என்கின்ற பல்லு லோகேஷ் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் மது குடித்து விட்டு தனது எதிரியான ரவுடி கண்ணனை கொலை செய்ய திட்டம் திட்டி கத்தியுடன் சுற்றி திரிந்தாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர் தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.