ETV Bharat / city

நடிகர் சங்க கட்டடப் பணிகள் 3 மாதங்களில் தொடங்கவுள்ளது - விஷால் பேட்டி!

author img

By

Published : May 8, 2022, 9:57 PM IST

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை 3 மாதத்தில் தொடங்க உள்ளதாக நடிகர் சங்கப்பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால்
விஷால்

சென்னை: சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில், நடிகர் சங்கத்தின் 66ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழு கூட்டம்
நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழு கூட்டம்

இதில், நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ், குஷ்பூ, பொன்வண்ணன், சுஹாசினி, மனோபாலா, சிபிராஜ், நடிகர் சிவகுமார் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர்கள்
மேடையில் நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர்கள்

கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும், நடிகர் சங்க கட்டடத்தை, கட்டி முடிப்பதற்காக நிதி திரட்ட வேண்டும், நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், கரோனா தொற்றால் உயிரிழந்த கலைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் பலர்
நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் பலர்

இதுமட்டுமில்லாமல் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி ஆகியோருக்கு மேடையில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

பின்னர் நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், "நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பேச்சைக் குறைத்து விட்டு நாளை முதல் செயலில் இறங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், "நடிகர் சங்க கட்டடப் பணிகள் 70 விழுக்காடு முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகளை முடிக்க இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக நடிகர்களிடம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க கட்டடப் பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கப்படும். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, புதிதாக சென்னைக்கு வருபவர்கள் இந்த கட்டடத்தை பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று கூறும் அளவிற்கு பிரத்யேகமாக கட்ட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: “சிவாவை பார்த்து அழுதுட்டேன்” - டான் பட விழாவில் சமுத்திரகனி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.