அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு

author img

By

Published : Jan 11, 2022, 2:58 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தனியார் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியபோல் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதையும் கருத்தில்கொண்டே சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வாதங்களை முன்வைக்க மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு வழக்குகளின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேற்கொண்ட எந்தத் தரப்பிற்கும், எந்தக் காரணத்திற்காகவும் அவகாசம் வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திமுக எம்பி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.