ETV Bharat / city

தலைமைச் செயலகத்தில் புகைப்படத்துடன்கூடிய நுழைவுசீட்டு முறை தொடக்கம்!

author img

By

Published : Nov 25, 2019, 5:54 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கும் சோதனை முயற்சி தொடங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகம்

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அரசு துறைகளின் அலுவலகங்கள் போன்ற பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வரும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமை செயலகத்திற்கு, நாள்தோறும் பல்வேறுதரப்பு மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தலைமைசெயலகத்தின் பாதுகாப்பு, முக்கியத்துவம்கருதி அங்கே வருகை தரும் நபர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக, சென்னை காவல்துறை அதிகாரிகள் சோதனை முயற்சியை மேற்கொண்டனர்.

அதிகபட்சம் ஒருநாள்வரை செல்லுபடியாகும் இந்த நுழைவு சீட்டிற்கான சோதனை முயற்சியின் முதல்கட்டமாக, காவல்துறையினர், வருகைதரும் மக்கள் அனைவரிடமும், முகவரி உள்ளிட்ட அவர்களின் தகவல்களை பெற்றுக்கொண்டு தலைமை செயலகத்திற்குள் அனுமதி அளித்தனர். மேலும், அவர்களின் புகைப்படங்கள், கைப்பேசிகளுடன் இணைக்கப்பட்ட அச்சிடப்படும் இயந்திரங்களின்மூலம் அச்சிடப்பட்டு, உடனடியாக புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை தலைமைச் செயலகம்
சென்னை தலைமைச் செயலகம்

பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தக் கருவியை கண்டுபிடித்து உள்ளது. தற்போது ஒரு கருவி மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் மூன்று கருவிகள் உபயோகப்படுத்தப்பட உள்ளன. மேலும், இது சோதனை முயற்சிதான் என்றும், வாகனங்களில் வருபவர்களை இந்த முறையில் சோதித்து அனுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம்

இதே போன்று சென்னை வெப்பேரியில் உள்ள மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலும் நுழைவுச்சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்!

Intro:Body:தலைமைசெயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கும் சோதனை முயற்சி தொடங்கியது.

கடற்கரை சாலையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை 107.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனுள் தமிழக அரசின் தலைமை செயலகம் உள்பட பல்வேறு அரசு துறைகளை உள்டக்கிய நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவை செயல்பட்டு வருகிறது.

தலைமை செயலகத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி முதலமைச்சரின் தனிப்பிரிவு, அரசு துறைகள் போன்ற பல்வேறு துறைகள் செயல்பட்டு வருவதால், பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரகணக்கான மக்கள் தலைமை செயலகத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் மக்கள் அனைவரின் முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்று கொண்டு காவல்துறையினர் தலைமை செயலகத்திற்கு அனுமதி அளித்து வந்தனர்.

தலைமை செயலகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி, புதிய நடைமுறையாக புகைப்படத்துடன் நுழைவுச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரிகள், தலைமை செயலகத்திற்கு வருகை தரும் நபர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு முறை அமல்படுத்துவது தொடர்பாக சோதனை முயற்சி மேற்கொண்டனர்.

அதன்படி தலைமை செயலகத்திற்கு வருகை தரும் மக்களின் புகைப்படம் செல்போனில் எடுக்கப்பட்டு, சிறிய வகையான மிஷின் மூலம் அச்சிட்டு புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நுழைவு சீட்டை வைத்து கொண்டு ஒருநாள் முழுவதும் தலைமை செயலகத்தின் எந்த பகுதிக்கும் அந்த நபர் சென்று வர முடியும். அதற்கு மறுநாள் அந்த நுழைவு சீட்டை பயன்படுத்த முடியாது. இதற்கான சோதனை முயற்சி சென்னை தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலில் நடக்கிறது.

பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த கருவியை கண்டுபிடித்து உள்ளது. முதல்கட்டமாக ஒரு கருவியில் ஆரம்பித்த இந்த முயற்சி வெற்றி பெற்றால் 3 கருவிகள் இங்கு வழங்கப்பட உள்ளது. இது சோதனை முயற்சிதான் என்றும், வாகனங்களில் வருபவர்களை இந்த முறையில் சோதித்து அனுப்ப இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நுழைவு சீட்டு வழங்குவது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.