ETV Bharat / city

ஆசிரியர்களுக்கு விருது கிடையாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

author img

By

Published : Jul 21, 2019, 4:23 PM IST

school

சென்னை: வணிக ரீதியில் தனிப்பயிற்சி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதிற்கு பரிந்துரைக்க கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களின் பெயர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறியுள்ளதாவது, ”2018-19ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் தின விழா செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

அந்த விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிட பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளைச் சேர்ந்த அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து பரிந்துரை செய்யவேண்டும்.

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் தங்களது பணியில் கடமை தவறாதவராகவும், கால நேரம் பார்க்காமல் பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். தவறாது பள்ளிக்கு வருகைத் தந்து தன்னலமற்ற வகையில் எந்தவித பயனும் கருதாமல் தொண்டாற்றி மாணவர்களின் கல்வி முன்னேற்றமே பெரிதெனக் கருதி அதன் மூலம் மாணவர் சேர்க்கையையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகாிக்கச் செய்த ஆசிரியர்களை கண்டுபிடித்து பரிந்துரை செய்ய வேண்டும்.

நடத்தை விதிகளுக்கு முரணாகத் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுத்து, கல்வியினை வணிக ரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், தனியார் பள்ளிகளில் நிர்வாக ரீதியாக இருக்கும் ஆசிரியர்களையும் தேர்வு செய்து இந்த விருதிற்கு பரிந்துரைக்கக் கூடாது. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைக்கும், குற்றச்சாட்டிற்கும் உட்படாதவராகவும், அரசியலில் ஈடுபட்டு அதன் மூலம் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாதவராகவும், பொது வாழ்வில் தூய்மையானவராகவும், பொதுச் சேவையில் அக்கறை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

குற்றப் பின்னணியில் உள்ளவர்களைத் தேர்வு செய்து விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது என புகார் மனுவின் மூலம் பின்னர் தெரியவந்தால் பரிந்துரைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் ரகசியம் காத்து சொந்தப் பொறுப்பில் வைக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:
டியூசன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு விருது கிடையாது
பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
Body:

சென்னை,
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களை பெயர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறியுள்ளதாவது, 2018- 19 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் தின விழா செப்டம்பர் 5 ந் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிட பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து பரிந்துரை செய்ய வேண்டும்.

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் தனது பணியில் கடமை தவறாதவராகவும், காலம் தவறாமல் கால நேரம் பார்க்காமல் பணிபுரிபவராகவும், தவறாது பள்ளிக்கு வருகைத் தந்து தன்னலமற்ற வகையில் எந்தவித பயனும் கருதாமல், தொண்டாற்றி மாணவர்களின் கல்வி முன்னேற்றமே பெரிதென கருதி அதன் மூலம் மாணவர் சேர்க்கையையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகாிக்கச் செய்த ஆசிரியர்களை கண்டு பிடித்து பரிந்துரை செய்ய வேண்டும்.

நடத்தை விதிகளுக்கு முரணாகத் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுத்து , கல்வியினை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், தனியார் பள்ளிகளில் நிர்வாக ரீதியாக இருக்கும் ஆசிரியர்களையும் தேர்வு செய்து இந்த விருதிற்கு பரிந்துரைக்க கூடாது.

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைக்கும், குற்றச்சாட்டிற்கும் உட்படாதவராகவும், அரசியலில் ஈடுப்பட்டு, அதன் மூலம் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாதவராகவும், பொது வாழ்வில் தூய்மையானவராகவும், பொதுச் சேவையில் அக்கறை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

குற்றப்பின்னணியில் உள்ளவர்களைத் தேர்வு செய்து விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது என புகார் மனுவின் மூலம் பின்னர் தெரியவந்தால் பரிந்துரைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் ரகசியம் காத்து சொந்தப்பொறுப்பில் வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.














Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.