ETV Bharat / city

Cauvery Delta Crop Damage: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு

author img

By

Published : Nov 16, 2021, 12:02 PM IST

Updated : Nov 16, 2021, 1:22 PM IST

Kaveri Delta Crop damage, committee of ministers for report Kaveri Delta Crop damage, Kaveri Delta Crop damage report submitted, டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேதங்கள்,
Kaveri Delta Crop damage

வடகிழக்குப் பருவமழையால் (Northeast Monsoon) டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேதங்களை (Delta Crop damage) ஆய்வுசெய்த அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு, தங்களின் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (நவம்பர் 16) சமர்ப்பித்தது.

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த வாரம் பெய்த பெருமழையால் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்தன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி நாசமாகின.

ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு

இதையடுத்து, பயிர் சேதம் குறித்து ஆய்வுசெய்ய கூட்டுறவுத் துறை ஐ. பெரியசாமி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினை அமைத்து மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்பித்த அமைச்சர் குழு

இந்தக் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம்

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 68 ஆயிரத்து 652 ஹெக்டேர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Kaveri Delta Crop damage, committee of ministers for report Kaveri Delta Crop damage, Kaveri Delta Crop damage report submitted, டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேதங்கள்,
பயிர்சேதங்கள் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்த அமைச்சர் குழு

மழையால் பாதிக்கப்பட்ட உழவருக்கு ஹெக்டேருக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் தருவது குறித்து அரசு ஆலோசித்துவருகிறது. இது குறித்த அறிவிப்பை ஸ்டாலின் விரைவில் வெளியிட இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. பயிர் சேதம், வெள்ள நிவாரண உதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுத இருக்கிறார்.

இதையும் படிங்க: Complaint against C Vijayabaskar: வேலை வாங்கித் தருவதாக ரூ. 72 லட்சம் மோசடி

Last Updated :Nov 16, 2021, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.