ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து

author img

By

Published : Feb 11, 2022, 7:10 PM IST

Rajendra bajaji
Rajendra bajaji

கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் 24 தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், புகார்தாரரும் காணொலி காட்சியில் ஆஜரானார்கள்.

அப்போது, சமசரம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட ஐந்து பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை இளம் வழக்கறிஞர்கள் நல நிதியதிற்கு ரூ.50,000 செலுத்த வேண்டுமென ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக நீட்டிப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.