ETV Bharat / city

கரோனா பாதிப்பு ; ‘பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ - ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

author img

By

Published : Aug 11, 2021, 4:32 PM IST

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

a
a

சென்னை: ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கான 15 படுக்கைகளுடன் கூடிய கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “34 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை

அதில், நான்கு மாவட்டங்களில் தொற்றால் 100க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குவது வருத்தமளிக்கிறது.

சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் 300 பேர் கூடி கூட்டம் நடத்தி, அதில் 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் தடுப்பூசி போடவில்லை. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்களில் 38 விழுக்காடு பேர் தான் முகக்கவசம் அணிகின்றனர். அனைத்து மத ஆலயங்களிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதில்லை. தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

கூட்டம் கூடுவதை தவிர்ப்பது நல்லது

கரோனாவை பொதுமக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம். அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல் கரோனா தொற்றாளர்கள் இருக்கலாம். தேவையற்ற கூட்டத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமல் தனிமையில் கொண்டாடுவது நல்லது. கரோனா தொற்று எண்ணிக்கை 500க்கு கீழ் கொண்டு வர பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஈரோடு, காரமடை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் தடுப்பூசிகள் போடுவதை அதிகப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். கீழ்ப்பாக்கம் பகுதி ஒரு எடுத்துக்காட்டு தான். அது போன்று நிறைய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் சேர்ந்து கரோனாவை பரப்புகின்றனர்.

மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிபிஇ கிட், கிளவுஸ் போன்றவற்றை எப்போதுமே அணிந்து இருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கோவிஷீல்டு - கோவாக்சின் கலவை குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.