ETV Bharat / city

வணிக வங்கிகளோடு போட்டி போடும் அளவுக்கு வியாபாரத்தை பெருக்கவேண்டும் - கூட்டுறவு வங்கிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

author img

By

Published : Jun 21, 2022, 1:06 PM IST

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

கூட்டுறவு வங்கிகள் வணிக வங்கிகளோடு போட்டி போடக் கூடிய அளவில் வியாபாரத்தினை பெருக்கவேண்டும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைமுதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (ஜூன்20) ஆய்வு மேற்கொண்டு கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 1905-ல் தொடங்கப்பட்ட வரலாறு, வங்கியின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டம், தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி, சுய உதவிக் குழுக் கடன் தள்ளுபடி மற்றும் நகைக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார். தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 2021-22ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய மொத்த லாபமாக ரூ.309 கோடியை ஈட்டியுள்ளதை நினைவு கூர்ந்தார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

பின்னர், 2022-23ஆம் ஆண்டில் மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு, திட்டங்களை செயல்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி, அதனை விரைவில் செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவுத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முன்கூட்டியே முடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் கொண்டு வரப்படவுள்ளள யூபிஐ போன்ற திட்டங்களை வருங்காலத்தில், கூட்டுறவு வங்கிகள் வணிக வங்கிகளோடு போட்டி போடக் கூடிய அளவில் வியாபாரத்தினை பெருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை
நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை

மேலும், வங்கியின் கிளைகள் மூலமாக வழங்கப்பட்ட கடன்கள், முன்னேற்றங்கள் மற்றும் திட்டங்களை விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அது மட்டுமின்றி, வணிக வங்கிகள் வழங்கும் அனைத்து விதமான வங்கி சேவைகளையும் கூட்டுறவு வங்கிகள் மேற்கொள்ள தேவையான அனைத்துத் திட்டங்களையும் வகுத்து, அதனைக் காலத்திற்கேற்ற தொழில்நுட்ப சேவை வாயிலாக வழங்க வங்கியின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டுறவு வங்கிகள் 'மக்கள் வங்கிகள்' என்பதனை மனதில் நிறுத்தி, அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றி, ஏழை எளிய மக்கள் அனைத்து வங்கிச் சேவை மற்றும் கடன் சேவைகளையும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

கூட்டுறவு வங்கிகளில் பொது மக்கள் கடன் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் உயர்த்த ஏதுவாக, கூட்டுறவு வங்கிகள் பொது மக்களிடமிருந்து வைப்பீடுகள் பெற்றும், அரசுத் துறைகளில் உள்ள வைப்பீடுகள் மற்றும் தேசிய வங்கியின் மறு நிதியுதவி ஆகியவற்றைப் பெற்றும், மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்குத் தேவையான நிதியினை வாங்கி அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமென்றும் கூறினார்.

இதையும் படிங்க: கூடுதல் இயந்திரங்கள் அமைத்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யநடவடிக்கை - உணவுத்துறை முதன்மைச்செயலாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.