ETV Bharat / city

சிபிஐ எதையும் கைப்பற்றவில்லை - ப.சிதம்பரம் விளக்கம்

author img

By

Published : May 17, 2022, 1:46 PM IST

ரெய்டில்  எதுவும் கிடைக்கவில்லை- ட்விட்டரில் ப சிதம்பரம் விளக்கம்
ரெய்டில் எதுவும் கிடைக்கவில்லை- ட்விட்டரில் ப சிதம்பரம் விளக்கம்

சிபிஐ எதுவும் கண்டுபிடிக்கவில்லை மற்றும் எதையும் கைப்பற்றவில்லை என தனது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை: முறைகேடாக ரூ.50 லஞ்சம் பெற்றுக்கொண்டு சீன நாட்டினருக்கு விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2010 - 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தின் போது கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடான வழிகளில் பணம் கிடைத்தது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • This morning, a CBI team searched my residence at Chennai and my official residence at Delhi. The team showed me a FIR in which I am not named as an accused.

    The search team found nothing and seized nothing.

    I may point out that the timing of the search is interesting.

    — P. Chidambaram (@PChidambaram_IN) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், "இன்று காலை சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர். அக்குழு எனக்கு ஒரு எஃப்ஐஆர் காப்பியை காட்டியது, அதில் நான் குற்றம் சாட்டப்பட்டவனாக குறிப்பிடப்படவில்லை.

சிபிஐ எதுவும் கண்டுபிடிக்கவில்லை மற்றும் எதையும் கைப்பற்றவில்லை. சோதனை சுவாரஸ்யமானதாக இருந்தது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.