ETV Bharat / city

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு

author img

By

Published : Nov 10, 2019, 8:35 PM IST

ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் பிடிக்க உத்தரவு

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் நாளை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, ரேஷன் கடை பணியாளர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், தனித்துறை உள்ளிட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.

அப்போது தமிழ்நாடு அரசு ஒரு குழு அமைத்து 20 கோரிக்கை மீதான பரிந்துரையின் அடிப்படையில் நிதி செலவில்லாத 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றியது. நிதி சார்ந்த 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் இருந்தது. மீண்டும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை முதல் அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கண்ணன், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தில், 'நாளை முதல் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையிலும், பொது விநியோகத் திட்டப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், பொதுமக்களுக்கு நியாய விலை கடைப் பொருட்கள் தடையின்றி கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்; மாற்று ஏற்பாடுகள் செய்யும்பொழுது வழக்கமான பணிகள் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்' என்றும் குறிப்பிடபட்டிருந்தார்.

மேலும், 'வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் நியாய விலைக்கடை பணியாளர்கள், பணி செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்றும்; சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு அளிக்கலாம் - அதிமுக அறிவிப்பு

Intro:ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் பிடிக்க உத்தரவு


Body:ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் பிடிக்க உத்தரவு
சென்னை,

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் 11 ந் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கண்ணன் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் தங்களின் 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே 11ஆம் தேதி முதல் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையிலும், பொதுவிநியோகத் திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், பொதுமக்களுக்கு நியாய விலை கடை பொருட்கள் தடையின்றி கிடைக்கும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மாற்று ஏற்பாடுகள் செய்யும்பொழுது வழக்கமான பணிகள் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.

11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு , பணி செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுதியம், தனித்துறை உள்ளிட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினர். அப்பொழுது தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது . அந்தக் குழு அளித்த 20 கோரிக்கை மீதான பரிந்துரையின் அடிப்படையில் நிதி செலவில்லாத 11 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளது. நிதி சார்ந்த 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் உள்ளது. தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.