ETV Bharat / city

நீட் தேர்வு: தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்... 3 மாணவர்கள் மரணம்...

author img

By

Published : Sep 16, 2021, 6:56 PM IST

suicide attempt
suicide attempt

நீட் தேர்வு அச்சம் காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (52). இவரது மகன் தனுஷ் செப்.12ஆம் தேதி மூன்றாவது முறையாக மேச்சேரி காவேரி கல்லூரியில் நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், அன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு தேர்வு அச்சம்தான் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, செப்.14ஆம் தேதி அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் கனிமொழி, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சோகத்திலிருந்தே மக்கள் வெளிவராத நிலையில், நேற்று செப்.15ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த சவுந்தர்யா என்னும் மாணவி பொதுத் தேர்வில் 600க்கு 510 மதிப்பெண் பெற்று, நீட் தேர்வு எழுதினார். பின்னர், இந்தத் தேர்வை திறம்பட எழுத முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அய்யநேரி பகுதியைச் சேர்ந்த மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் நீட் தேர்வை திறம்பட எழுத முடியவில்லை என்பதால் அனுசியா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அவர் 40 விழுக்காடு தீக்காயங்களுடன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீட்டால் தொடரும் தற்கொலைகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: நீட் தேர்வு - மாணவி தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.