ETV Bharat / city

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசியக் கொடியேந்தி போராட்டம்!

author img

By

Published : Dec 27, 2019, 6:30 PM IST

சென்னை: திருவொற்றியூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமியக் கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest

திருவொற்றியூர் சுங்கச் சாவடி அருகில் நடந்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக கட்சிகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையில் தேசியக் கொடிகளை ஏந்தியும், போராட்டம் நிறைவுபெறும்போது தேசிய கீதம் பாடியும் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தேசியக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இசுலாமியர்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அப்துல் காதர், “ இந்தியா எங்கள் தாய்நாடு. நாங்கள் எங்கள் உயிரை விட அதிகமாக இந்நாட்டை மதிக்கிறோம். அந்தத் தாய்நாட்டிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதை அமல்படுத்தியும் இருக்கிறது பாஜக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமானால், அது இந்தியாவில் வாழுகின்ற 25 கோடி இஸ்லாமியர்களின் உயிர் போன பிறகுதான் முடியும் “ எனக் கூறினார்.

இசுலாமியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் அது எங்கள் உயிர் போன பிறகுதான் முடியும்!

இதையும் படிங்க: ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக தடுத்திருக்க முடியும்’ - கனிமொழி

Intro:தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய ஜமாத்துக்கு கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


Body:தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை திருவொற்றியூர் டோல் கேட் அருகில் ஜமாத் கூட்டமைப்பினர் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது மேலும் இந்த சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் இந்த போராட்டம் பெரிய அளவில் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர் மேலும் பாஜகவிற்கு ஆதரவாக இந்த சட்ட திருத்த மசோதாவில் வாக்களித்தார் திமுக மற்றும் பாமக கட்சிகளை வன்மையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாம் அமைப்பினர் கையில் தேசியக் கொடிகளை ஏந்தி போராட்டம் முழக்கங்களை முழக்கமிட்டனர் பின்னர் போராட்டம் நிறைவு பெறும் தருவாயில் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய அமைப்பினர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜமாத் அமைப்பினர் அப்துல் காதர் கூறும்போது

இந்தியா எங்கள் தாய்நாடு நாங்கள் எங்கள் உயிரை விட அதிகமாக மதிக்கிறோம் அந்தத் தாய் நாட்டிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை அமல் படுத்தி இருக்கிறது அதன் விளைவாக எங்களுக்கு ஆதரவாக தேசிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இந்த ஆர்ப்பாட்டம் உச்சக்கட்டமாக மத்திய அரசு இப்போதைக்கு இதை நான் நடைமுறைபடுத்த மாட்டோம் என்று ஒரு பொய் சொல்லி இருக்கிறது

எங்களை வெளியேற்ற சொன்னால் இந்தியாவில் வாழுகின்ற 25 கோடி முஸ்லிம்களின் உயிருக்குப் பிறகுதான் வெளியேற்ற முடியும்

இஸ்லாமியர்களை வெளியேற்ற முயற்சி செய்தால் மத்திய அரசு நிச்சயம் கவிழும் மேலும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்


Conclusion:தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய ஜமாத்துக்கு கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.