ETV Bharat / city

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாடல் வெளியிட்டு இசை அஞ்சலி!

author img

By

Published : Jun 9, 2021, 2:43 PM IST

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாடல் வெளியிட்டு செலுத்தப்பட்ட இசை அஞ்சலி
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாடல் வெளியிட்டு செலுத்தப்பட்ட இசை அஞ்சலி

பிரபல மருத்துவ நிபுணரும், எஸ் பி பாலசுப்ரமணியத்தின் நண்பருமான டாக்டர் ஆர் ஸ்ரீதரன் (கற்பகதாசன்), பாடகர் சிக்கில் குருசரணுடன் இணைந்து, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75ஆவது பிறந்த நாளுக்காக பாடல் இயற்றி இசை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல மருத்துவ நிபுணரும், எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் நண்பருமான டாக்டர் ஆர் ஸ்ரீதரன் (கற்பகதாசன்), பாடகர் சிக்கில் குருசரணுடன் இணைந்து, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75ஆவது பிறந்த நாளுக்காக இசை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்தில் வெளிவந்த ‘துள்ளி திரிந்த பெண் ஒன்று...’ பாடலை அடிப்படையாகக் கொண்டு ‘துள்ளி திரிந்த உயிர் ஒன்று, துயில் கொண்டதே இன்று...’ எனும் பாடலை டாக்டர் ஸ்ரீதரன் இயற்ற, சிக்கில் குருசரண் பாடியுள்ளார்.

எஸ்.பி.பியின் 75ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில், டோக்கியோ தமிழ் சங்கம், சர்வதேச தமிழ் சங்கங்கள் இணையவழியில் நடத்திய நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. அருண் மேனனின் இசை கோர்ப்பில் வெளியான இந்த பாடலின் அர்த்தம் பொதிந்த வரிகள், ஆத்மார்த்தமான பாடும் முறை ஆகியவற்றால் யூடியூப், இதர சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாடல் வெளியிட்டு செலுத்தப்பட்ட இசை அஞ்சலி

இது குறித்து பாடகர் சிக்கில் குருசரண் பேசுகையில், “டாக்டர் ஸ்ரீதரன் பாடல் வரிகளை சில வாரங்களுக்கு முன் எனக்கு அனுப்பி வைத்து, ‘துள்ளி திரிந்த பெண் ஒன்று...’ பாடலைப் போலவே இதையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது. எஸ்.பி.பி சாரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாடல் வெளியானது இன்னும் சிறப்பு. நமது இதயங்களை என்றும் ஆளும் எஸ்.பி.பிக்கு எங்களது சிறிய காணிக்கை இது” என்றார்.

இது குறித்து டாக்டர் ஸ்ரீதரன் பேசுகையில், “எஸ்.பி.பியின் திடீர் மரணம் என்னை மிகவும் பாதித்த நிலையில் எழுதிய பாடல் இது. எஸ்.பி.பியின் 75ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்த டோக்கியோ தமிழ் சங்கம் முடிவெடுத்தது. அதன் பின்னர் ஊரடங்கு காலத்தில் மூன்றே நாள்களில் இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டு இணைய நிகழ்ச்சியில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க : சொக்க வைக்கும் சொர்ணக்கிளி சோனம் கபூருக்கு பிறந்தநாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.