ETV Bharat / city

'சீரமைப்போம் தமிழகத்தை' - இன்றுமுதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை

author img

By

Published : Dec 13, 2020, 7:09 AM IST

kamal haasan start his election campaign today
kamal haasan start his election campaign today

மதுரை: 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் இன்று (டிச. 13) முதல் கமல்ஹாசனின் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட பரப்புரை தொடங்குகிறது.

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன.

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (டிச. 13) முதல் 16ஆம் தேதிவரை முதல்கட்டமாக நான்கு நாள்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நான்கு நாள்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த முதல்கட்ட தேர்தல் பரப்புரையைப் பயணமானது, மதுரையிலிருந்து தொடங்கி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் மக்களை நேரடியாகச் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் இணையும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மக்களைச் சந்திக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமையகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...உத்திரமேரூரில் பழங்கால கோயிலில் 1 கிலோ தங்கப் புதையல் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.