ETV Bharat / city

கோயில்கள் திறப்பு எப்போது? முதலமைச்சரின் கையில் முடிவு - சொல்கிறார் சேகர் பாபு

author img

By

Published : Jun 25, 2021, 2:24 PM IST

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாட்டில் கோயில்களைத் திறப்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திருக்கோயில் பணிகளுக்கு ரூ.100 கோடி

"முதலமைச்சர் வழிகாட்டுதல்படி பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில்கள் தொடர்பான கோரிக்கைகள், குறைகளைத் தெரிவிப்பதற்காகக் குறைதீர்க்கும் அறையை தொடங்கிவைத்துள்ளோம்.

பொதுமக்கள் 044 - 2833 9999 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் குறைகளைத் தெரிவிக்கலாம்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு

அவர்களின் குறைகளை அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கோயில்கள் புதுப்பிக்கும் பணி, தெப்பக் குளங்களைச் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று குறைந்துவருகிறது. நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள சூழலில் முதலமைச்சர் கோயில்கள் திறப்பது குறித்த முடிவை அறிவிப்பார்.

'தமிழில் அர்ச்சனை' - நீண்ட கால திட்டம்

இந்து மக்கள் கட்சியினருக்குப் போராட வேறு காரணம் இல்லாததால் போராடுகின்றனர். இந்தப் போராட்டமும் நீண்ட நாள்கள் நடைபெறாது. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது. அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை கட்டாயமல்ல.

அறநிலையத்துறை அலுவலகத்தில் குறைதீர்ப்பு அறை
அறநிலையத் துறை அலுவலகத்தில் குறைதீர்ப்பு அறை

விரும்பும் பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்துகொள்ளலாம். திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குப்படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடுவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: '50 நாள்களில் முதலமைச்சரின் 50 சிறப்புத் திட்டங்கள்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.