ETV Bharat / city

'ஆதிதிராவிடர் நல நிதியை திமுக வீணடிக்காது'- அமைச்சர் கயல்விழி

author img

By

Published : Jul 6, 2021, 8:29 PM IST

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

ஒன்றிய அரசின் ஆதிதிராவிடர் நல நிதியை கடந்த அதிமுக அரசு திருப்பி அனுப்பியது போல் அல்லாமல் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முழுமையாக பயன்படுத்தும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை: முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் 35ஆவது நினைவு தினம் தமிழ்நாடு அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர் பேச்சு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி,"ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினரின் உரிமைக்காக பாபு ஜெகஜீவன் ராம் போராடினார். பள்ளியில் தனியாக பானையில் தண்ணீர் வைத்து பாகுபாடு காட்டியதை எதிர்த்து சிறு வயதிலேயே போராடியவர்" என புகழாரம் செலுத்தினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், "தமிழ்நாடு அரசின் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வரும் கல்வியாண்டில் முழுமையாக வழங்கப்படும்.

ஒன்றிய அரசின் தொகையை கடந்த அதிமுக அரசு சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி வந்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு ஒன்றிய அரசு வழங்கும் தொகையை முழுமையாக பயன்படுத்தும். உண்டு, உறைவிட பள்ளியில் காலியாக உள்ள வாடர்ன் பணியிடங்கள் நிரப்பப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: இந்தியர்னு நிரூபிங்க... ஆர்டிஐயில் தகவல் கேட்டவருக்கு கல்லூரி முதல்வர் ட்விஸ்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.