ETV Bharat / city

'தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது - மத்திய அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சர் துரைமுருகன் தகவல்

author img

By

Published : Jun 23, 2022, 8:09 AM IST

Updated : Jun 23, 2022, 9:22 AM IST

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் யாரும் எந்த அணையும் கட்ட முடியாது என்ற வாக்குறுதியை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அளித்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழக நீர்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில், தமிழக சட்டப்பேரவை குழு தலைவா்கள் டெல்லியில் மத்திய நீா்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து 'மேகதாது அணை' கட்ட அனுமதிக்க கூடாது என்று விளக்கி கூறினார். பின்னர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் விமான நிலையத்தில் நேற்று (ஜூன்22) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சட்டப்பேரவை கட்சி குழு தலைவர்கள் அனைவரும் சந்தித்தோம். தற்போது மேகதாது என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காவிரிக்கும் தமிழ்நாட்டுக்கும் 1968ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலம் தீர்ப்பாயம் முன் நடந்தது. பின்னர் பல வருடங்களாக வழக்கு நடந்தது. ஒரு நாள் கூட மேகதாது என்ற வார்த்தையை கர்நாடகம் உச்சரிக்கவில்லை. உச்சநீதிமன்றம் சென்றோம். அங்கேயும் மேகதாது என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்கவில்லை.

ஆனால், உச்சநீதிமன்றம் என்ன கூறியது என்றால் காவேரி வாட்டர் மேனேஜ்மென்ட் என்ற போர்டை அமைத்து, நாங்கள் கொடுத்துள்ள தீர்ப்பை நீங்கள் அமல்படுத்த வேண்டும். யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் அதிகாரம் என்று கூறியது. ஆனால், காவிரி வாரியம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் கர்நாடகம் சொல்லுகின்ற மேகதாது பற்றி நாங்கள் பேசுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி பேசுவதற்கு அதிகாரம் இல்லை நாங்கள் கூறினோம்.

மத்திய அமைச்சர் காவிரியில் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என வாக்குறுதி

பத்து, பதினைந்து முறை கேட்டுக்கொண்டு சரி என்று விட்டு விட்டார்கள். இப்பொழுது வழக்கறிஞர் ஒப்பீனியன் வாங்கி வந்து மேகதாது பற்றி பேசுவதற்கு உரிமை உண்டு என கூறுகிறார்கள்.

காவிரி ஆணையத்தை நியமித்தது உச்ச நீதிமன்றம். அந்த மன்றம் அதற்கான அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. காவிரி ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். இந்த அதிகாரம் வேண்டும் என்று கேட்டு இருக்க வேண்டும். வழக்கறிஞரிடம் ஒபீனியன் வாங்கி கொண்டு பேசுவது தவறு என்பதை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

மேகதாது எங்கே கட்டுகிறார்கள் என்றால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே வடியும் தண்ணீர் நமக்கு சொந்தம். கபினியில் இருந்து கீழே வழியும் தண்ணீரும் சொந்தம். அதன் பின்பு தண்ணீர் மட்டும் இல்லாமல் இயற்கையாக பொழியும் மழை தமிழ் நாட்டுக்கு சொந்தம் .

நமக்குரிய இடத்தில் அணை கட்டுவது உரிமை மீறல் என்பதை நாங்கள் கூறியுள்ளோம். ஜூலை 6, 7 ஆம் தேதி கமிட்டி கூட்டம் நடக்கிறது. அப்போது உங்கள் எதிர்ப்பு குறித்து பேசுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் யாரும் எந்த அணை கட்ட முடியாது என்ற அற்புதமான வாக்குறுதியை கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Last Updated : Jun 23, 2022, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.