ETV Bharat / city

ஒரே இரவில் 7 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது!

author img

By

Published : Oct 12, 2020, 11:02 PM IST

சென்னை: வியாசர்பாடியில் ஒரே இரவில் 7 இடங்களில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவரை 12 மணி நேரத்தில் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

cell phone theft cases in chennai
cell phone theft cases in chennai

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 10ஆம் தேதி வாகனத்திற்கு 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பிய ஒருவர் பணம் அளிக்காமல் பங்கில் இருந்த சங்கர் (47) என்பவரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். அத்துடன் அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக் கொண்டுசென்றார்.

இது தொடர்பாக சங்கர் எம்கேபி நகர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திய காவல் துறையினர் வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த கரடி அருண்(எ) அருண் (23) என்பவரை கைதுசெய்தனர்.

அதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வியாசர்பாடியில் பெட்ரோல் பங்கில் கொள்ளை சம்பவத்திற்குப் பின் அதே பகுதியில் ஸ்வேதா (21) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துள்ளார்.

செல்போன் பறித்த போது

அதேபோல், சர்மா நகர், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை ஐ ரோடு, ஓட்டேரி மசூதி, வில்லிவாக்கம் பகுதி என ஒவ்வொருப் பகுதியிலும் தலா ஒருவரிடம் செல்போன், பணம் பறித்துள்ளார்.

மேலும் அவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 8 வழக்குகள் உள்ளன. சில மாதங்களாக கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த அருண் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்" என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கத்தி முனையில் செல்போன் பறித்த மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.