ETV Bharat / city

அரியலூர் மாணவி தற்கொலை; மதக் கலவரத்தைத் தூண்டுவதாக அண்ணாமலை மீது காங்கிரஸ் புகார்

author img

By

Published : Jan 28, 2022, 6:12 PM IST

தூண்டுவதாக
தூண்டுவதாக

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: காங்கிரஸ் தகவல் அறியும் சட்டத்துறைத் தலைவர் கனகராஜ், ஜன.28ஆம் தேதியான இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தஞ்சாவூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்றம் காரணமாக மாணவி உயிரிழந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு மற்றும் ஹெச். ராஜா ஆகியோர் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதக் கலவரத்தை தூண்டுவதா?

குறிப்பாக மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை நடந்து வரும் வேளையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், இவர்கள் வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் இவர்களது போராட்டம் அமைந்துள்ளது.

மேலும், பூக்கடை போல இருக்கக்கூடிய தமிழ்நாட்டை, சாக்கடை போல மாற்றும் நோக்கிலும், அமைதியின்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் அண்ணாமலை, குஷ்பு மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 23 ஆண்டுகளுக்குப் பிறகு தாயைச் சேர்ந்த மகள் - சேலத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.