டெல்டா மாவட்டங்களில் மழை

author img

By

Published : Oct 11, 2021, 2:27 PM IST

டெல்டா மாவட்டங்களில் மழை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்று (அக். 11) சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 12: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 13: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் - உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 14: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும். ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் - உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 15: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

அரியலூர் 10செ.மீ., புதுச்சேரி, சோழிங்கநல்லூர் (சென்னை), மன்னார்குடி (திருவாரூர்), வீரகனூர் (சேலம், இரணியல் (கன்னியாகுமரி) தலா 7 செ.மீ., தலைஞாயிறு (நாகப்பட்டினம்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), கங்கவள்ளி (சேலம்) தலா 6 செ.மீ., செஞ்சி (விழுப்புரம்), பெருங்கலூர் (புதுக்கோட்டை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), ஒகேனக்கல் (தருமபுரி) தலா 5 செ.மீ., சேலம், பெரம்பலூர், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு), பாரூர் (கிருஷ்ணகிரி), தலா 4 செ.மீ., குழித்துறை (கன்னியாகுமரி), கள்ளக்குறிச்சி, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வரும் 13ஆம் தேதி அந்தமான், அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு, வட மேற்குத் திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி ஆந்திர - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

வங்கக் கடல் பகுதிகள்

அக்டோபர் 11: அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 12, 13: தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 14, 15: தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

அக்டோபர் 14, 15: கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் 4 இடங்களில் துப்பாக்கிச் சூடு.. 5 வீரர்கள் வீரமரணம்.. 2 பயங்கரவாதிகள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.