ETV Bharat / city

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களுக்கு ஓமைக்கரான் உள்ளதா? - மாதிரிகள் ஆய்வு

author img

By

Published : Dec 11, 2021, 3:53 PM IST

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் பெங்களூர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாமினை தி-நகர் சட்டப்பேரவை அலுவலகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், "தமிழ்நாட்டில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (டிச.11) நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு கோடியே 54 லட்சத்து 02 ஆயிரத்து 698 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில், முதல் தவனை தடுப்பூசியை 81.30 விழுக்காடு பேரும், இரண்டாவது தவனை தடுப்பூசியை 48.95 விழுக்காடு பேரும் செலுத்தியுள்ளனர்.

இந்திய அளவில் 2ஆவது தவனை தடுப்பூசி 53.50 விழுக்காடு என்ற அளவில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த அளவை தமிழ்நாடு எட்ட தொடர்ந்து பயணித்துகொண்டிருக்கிறது. இதுவரை நான்கு கோடியே 70லட்சத்து 65ஆயிரத்து 514 பேர் முதல் தவனை டோஸை செலுத்தியுள்ளனர்.

இரண்டாம் தவனை தடுப்பூசியை இரண்டு கோடியே 83 லட்சத்து 37ஆயிரத்து 184 பேர் செலுத்தியுள்ளனர். 94 லட்சத்து 15 ஆயிரத்து 147 பேர் இரண்டாம் தவனை செலுத்த வேண்டிய காலம் முடிந்து காத்திருக்கின்றனர். இதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கையிருப்பில் 95 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தற்போது உள்ளன.

78 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட சென்னையில் இதுவரை 60 விழுக்காடு பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 48 விழுக்காடு பேர் மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ப்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 43 ஆயிரத்து 938 பேரில் ஆயிரத்து 303 பயணிகளுக்கு உத்தேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 9 பேர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் 4 பேரும், நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் ஒருவரும், சென்னை தனியார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், பெங்களூரில் ஒரும் சிகிச்சையில் உள்ளனர். இவர்களது மாதிரிகள் பெங்களூர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் முடிவுகள் வரும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வளர்ந்த நாடுகளில் 80 விழுக்காடு தடுப்பூசி போடுவதற்கே சிரமம் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 81 விழுக்காடு பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, வேலூர், மதுரை மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதில் சுனக்கம் இருந்தது.

வேலூரில், திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட தொண்டு நிறுவனங்கள், மகளில் சுய உதவிக்கு குழுவினருடன் தடுப்பூசி பணிகள் குறித்து 16ஆம் தேதி ஆலோசனை, 20ஆம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

முதற்கட்ட பரிசோதனை டிஎம்எஸ் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. பரிசோதனைகறை உறுதி செய்ய பெங்களூர் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான சான்றிதழ் குளறுபடிகள் விரைவில் சரிசெய்யப்படும்.

தியேட்டர்களில் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: மக்களுக்கும், ஸ்டாலினுக்கும் விமானப்படை நன்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.