ETV Bharat / city

தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்த ஆளுநர்  ஆர்.என். ரவி

author img

By

Published : Oct 3, 2022, 9:13 AM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு அரசு சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டதற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: கரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக மகாத்தமா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்படவில்லை. இந்தாண்டு மிகவும் விமர்சையாக தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியை கொண்டாடியது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடந்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள காந்திமண்டபத்தில் நடைபெற்றது.

அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறைப்புரையாற்றும் போது, காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். அவர் நினைவை நாம் தொடர்ந்து போற்றிட வேண்டும்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்தியின் கொள்கை வழியில்தான் நம் நாட்டின் வளர்ச்சி உள்ளது. காந்தியை மறப்பது நம் பெற்றோரை மறப்பது போன்றது. காந்தி புரிந்துகொண்டது போல வேறுயாரும், இந்நாட்டை புரிந்துகொண்டது கிடையாது. மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவராக காந்தி திகழ்ந்தார். பல வேற்றுமை கொண்ட இந்நாடு ஒருமுகமாக காந்தியை ஏற்றுக் கொள்கிறது. காந்தியடிகள் கடைநிலை மனிதனை பற்றி சிந்திப்பவராக இருந்தார். காந்தியடிகளின் எண்ணம் கிராமங்களை மேம்படுத்துவதாக இருந்தது. இந்நாட்டின் ஆன்மா கிராமங்களில் இருப்பதாக உணர்ந்தவர்.

காந்தியின் சிந்தனை இன்றளவும் நாட்டிற்கு தேவையானதாக உள்ளது. தமிழர், தமிழ் கலாசாரம், தமிழ்மொழி மீது பற்றும் மரியாதையும் காந்தியடிகள் கொண்டிருந்தார். பழமையான தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று காந்தியடிகள் சொன்னார். காந்தியடிகள் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - கொட்டும் மழையில் ராகுல் காந்தி உரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.