ETV Bharat / city

50,000 மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்புக! - மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

author img

By

Published : Nov 12, 2020, 3:56 PM IST

சென்னை: மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்ட காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

balakrishnan
balakrishnan

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாடு மின்வாரியத்தில் களப்பணியிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டுமென கோரி மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இதன் விளைவாக மின்சார வாரியம் 10,000 கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தது. அதற்காக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உடற் தகுதி தேர்வும் மற்றும் எழுத்துத்தேர்வும் நடத்தி, 15,000 பேர் தேர்ச்சி பெற்றதாக மே மாதம் அறிவித்தது. ஆனால், கேங் மென் பணியாளர்களை பணியமர்த்த மின்வாரியம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

மின்சார வாரியத்தில் பீல்ட் அசிஸ்டென்ட், அசசர், ஜூனியர் அசிஸ்டென்ட் என்ற ஆரம்ப நிலை பணிகளில் சுமார் 52,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் சேவை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உருவாகிறது. இந்நிலையில் தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ள பத்தாயிரம் கேங்மென் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குவதில் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல. கால தாமதத்தின் மூலம் பணி நியமனத்தில் தவறுகள் நடக்குமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

ஆகவே, மின்வாரியத்தில் பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்களையும், காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பணியிடங்களையும் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வழங்கி, காலி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம் “ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் பள்ளிக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.